யாழ் மாவட்டச் செயலகத்தில் பொதுமக்கள் குறைகேள் மையம்

GA District Officeயாழ்ப்பாண மாவட்டத்தில் வாழும் மக்களை சமுக பொருளாதார ரீதியில் மேம்படுத்தும் பொருட்டு மாவட்ட செயலகமானது பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இதற்காக அரச உத்தியோகத்தர்கள் அர்பணிப்புடனும் பற்றுதியுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் செயற்பட்டு வருகிறார்கள். மேலும் பொதுமக்களுக்கு ஏற்படும் குறைகளை உடடனடியாகவும் பக்கச்சார்பற்ற முறையிலும் நிறைவேற்றுவதற்கு மேலதிக அரசாங்க அதிபர் தலைமையில் பொதுமக்கள் குறைகேள் மையம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. 021 222 5000 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக அல்லது இவ் அலகிற்கு கடிதம் மூலம் பொதுமக்கள் தெரிவிக்கும் குறைகள் மற்றும் தகவல்கள் உடனடியாக சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துடையாடி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக மாவட்டச் செலகம்விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக் குறைகேள் மையத்துக்கு பொதுமக்கள் தகவல் வழங்கும்போது சம்பவம் தொடர்பான துல்லியமான தகவல்களையும் புகைப்படம் காணொளி போன்ற ஆதாரங்களையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அத்துடன் தகவல்கள் தொடர்பாக இரகசியம் காக்கப்படவேண்டிய சந்தர்பங்களில் அவை தொடர்பாக இறுக்கமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

எனவே பொதுமக்கள் துணிந்து தமது குறைகளை வழங்குவதற்கு பொதுமக்கள் குறைகேள் மையத்துக்கு நேரடியாகவோ, மேலதிக அரசாங்க அதிபரிடமோ, 021 222 5000 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாககோ அல்லது கடிதமூடாகவோ தொடர்புகொள்ளுமாறும் தகவல் வழங்கும் பொழுது வழங்குனர் பற்றிய விபரங்களை பயமின்றி தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com