சற்று முன்
Home / செய்திகள் / யாழ் மாநகர முன்னாள் முதல்வர், தமிழ்த் தேசியவாதி சட்டத்தரணி சி.நாகராஜாவின் நினைவு நாள் இன்று

யாழ் மாநகர முன்னாள் முதல்வர், தமிழ்த் தேசியவாதி சட்டத்தரணி சி.நாகராஜாவின் நினைவு நாள் இன்று

யாழ்ப்பாணம் மாநகரசபையின் முதல்வராகவும் யாழ் மாவட்ட அபிவிருத்திச் சபையின் துணைத் தலைவராகவும் பணியாற்றிய தமிழ்த் தேசியவாதியான சட்டத்தரணி சின்னத்தம்பி நாகராஜாவின் நினைவு நாள் இன்றாகும்.

1966 ஆண்டு யாழ்ப்பாணம் மாநகர முதல்வராகப் பணியாற்றிய திரு. சின்னத்தம்பி நாகராஜா தனது 77 ஆவது வயதில் 08.05.2008 அன்று அமெரிக்காவின் நியூஜெர்சி நகரில் காலமானார். தீவிர தமிழ்த் தேசியவாதியான அவர் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்காக ஐக்கிய அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஆதரவு திரட்டுவதில் முன்னின்று செயற்பட்டிருக்கிறார்.

திரு. நாகராஜா, பெப்ரவரி 28, 1931 இல் பிறந்தார். யாழ்ப்பாண இந்துக் கல்லூரியின் கல்வி பயின்ற இவர் பின்னர் சென்னை சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில், இளங்கலை பட்டம் மற்றும் ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றார். இலங்கைக்குத் திரும்பிய பின்னர் இலங்கையின் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் சட்டத்தரணியாகப் அவர் பணியாற்றியிருந்தார்.

யாழ்ப்பாண மாநகசர சபையில் 08.01.1966 முதல் 24.03.1966 வரை முதல்வராகப் இருந்த அவர் பின்னர் யாழ் மாவட்ட அபிவிருத்திச் சபையின் துணைத் தலைவராகப் பணியாற்றினார்.
1982 ஆம் ஆண்டில் மாவட்ட அபிவிருத்திச் சபையின் துணைத் தலைவராக பதவியிலிருந்து ராஜினாமா செய்தஅவர் பின்னாட்களில் தீவிர தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளராக 1990 வரை யாழ்ப்பாணத்திலிருந்தும் வன்னியிலிருந்தும் பணியாற்றினார்.

1989 இல், இந்திய இராணுவம் இலங்கையின் வட-கிழக்கை ஆக்கிரமித்துக்கொண்டிருந்தபோது, ​​வன்னிக்கு சென்ற அவர், விடுதலைப் புலிகளின் அரசியல் தலைமையகத்தில் தங்கியிருந்து அரசியல் நடவடிக்கைகள் மற்றும் அரசியலமைப்பு விடயங்களில் பங்கு பெற்றார்.

1990 களின் முற்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் புதிதாக தமிழீழ நீதித்துறை ஆரம்பிக்கப்பட்டபோது நீதித்துறை திணைக்களத்தில் நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளுக்கு அவர் விரிவுரைகளை வழங்கினார்.

1990 களின் பிற்பகுதியில், அவர் நியூயோர்க்கிற்கு நிரந்தரமாக குடிபெயர்ந்த நாகராஜா அங்கு தீவிர தமிழ்ச் செயற்பாட்டாளராக பங்காற்றியதோடு தமிழர் பிரச்சனை தொடர்பில் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களுடனும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுவந்தார்.

“நாங்கள் பயங்கரவாதிகளோ பிரிவினைவாதிகளோ அல்ல, எமது இழந்த சுதந்திரத்தை மீண்டும் பெறுவதற்கு நாங்கள் மீண்டும் போராடுகிறோம்,” தமது பாரம்பரிய தாய்நாட்டிற்கு சுதந்திரம் மீளப்பெறுவதற்கு தமிழ் மக்களுக்கு உரிமையுண்டு, மக்களுடைய இறையாண்மையை மீட்டெடுக்க உரிமை உண்டு என நவம்பர் 2007 இல் அமெரிக்காவில் நடைபெற்ற தமிழர் நினைவுநாள் நிகழ்வொன்றில் உரையாற்றியிருந்தார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com