யாழ் மாநகர முதல்வராக இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவு !

யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வராக இம்மானுவல் ஆர்னோல்ட், தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது தடவையாக இரகசிய வாக்கெடுப்புக்கு தெரிவு செய்யப்பட்ட, ஈபிடிபி வேட்பாளர் முடியப்பு ரெமீடியஸ் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்ததை அடுத்து, யாழ். மாநகர முதல்வராக இம்மானுவல் ஆர்னோல்ட், தெரிவானார்.

 

பெயர் முன்மொழிவு

முன்னதாக, இன்று காலை 9 மணியளவில் ஆரம்பமான யாழ். மாநகரசபையின் முதலாவது அமர்வில், முதல்வரைத் தெரிவு செயவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து, மாநகர முதல்வர் பதவிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இம்மானுவல் ஆர்னோல்டின் பெயரை முன்மொழிந்தது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி,வி. மணிவண்ணனின் பெயரை முன்மொழிந்தது. ஈபிடிபி முடியப்பு ரெமீடியசின் பெயரை முன்மொழிந்தது.

இதனையடுத்து இரகசிய வாக்கெடுப்பு நடத்துவதா பகிரங்க வாக்கெடுப்பு நடத்துவதா என சபை உறுப்பினர்களிடம் கோரப்பட்டது. சபைக்கு தலைமை வகித்த உள்ளூராட்சி ஆணையாளர் ஒவ்வொரு உறுப்பினரது பெயரையும் வாசிக்க அவர்கள் இரகசிய, பகிரங்க வாக்கெடுப்பு என தமது விருப்பத்தினைக் கூறிக்கொண்டிருந்தனர். அவை கணிக்கப்பட்டது. இறுதியில் இரகசிய வாக்கெடுப்பிற்கு ஆதரவாக 25 வாக்குகளும்பகிரங்க வாக்கெடுப்பிற்கு ஆதரவாக 19 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

இரகசிய வாக்கெடுப்பிற்கு அஆதரவாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈழமக்கள் ஜனநாயக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். பகிரங்க வாக்கெடுப்பே வேண்டும் என தமிழ்த் தேசியக் கூடு்டமைப்பும் ஐக்கிய தேசியக் கட்சியும் கோரிக்கை விடுத்தன. அதிக உறுப்பினர்கள் இரfசிய வாக்கெப்பினைக் கோரியதால் இறுதியில் இரகசிய வாக்கெடுப்பு நடத்துவது என அறிவிக்கப்பட்டது.

வாகெடுப்பு 

இதையடுத்து இரகசிய வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டு, வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இரகசிய வாக்கெடுப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிறுத்திய ஆர்னோல்ட் 18 வாக்குகளைப் பெற்றார்.
ஈபிடிபி நிறுத்திய ரெமீடியசும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நிறுத்திய வி. மணிவண்ணனும், தலா 13 வாக்குகளைப் பெற்றனர்.

 

திருவிளச் சீட்டில் ஒருவர் நீக்கம்

இரண்டுக்கு மேற்பட்டவர்கள் போட்டியிடும் சர்தர்ப்பத்தில் முதல் போட்டியிட்டவர் பெற்ற வாக்குகுளை விட ஏனையவர்களது கூட்டு வாக்குகள் அதெிகமாக இருப்பின் வாக்கு அடிப்படையில் முதல் இருவரை வைத்து மீண்டும் வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்பதே விதிமுறை. அதனடிப்படையில் ஏனைய இருவரும் சமமாக வாக்குகுளைப் பெற்றிருந்ததால் திருவிளச் சீட்டு முறையில் ஒருவரை நீக்க முடிவெடுக்கப்பட்டது.

இதனால், இறுதி வாக்கெடுப்புக்காக- சம வாக்குகளைப் பெற்ற ரெமீடியஸ் மற்றும் மணிவண்ணன் ஆகியவர்களில் ஒருவரை திருவுளச்சீட்டுமூலம் தெரிவு செய்ய முடிவு செய்யப்பட்டது.

 

மணிவண்ணன் நீக்கம்

இதையடுத்து, திருவுளச்சீட்டில் இவர்களின் பெயர்கள் எழுதப்பட்டு. அவற்றில் ஒன்று எடுக்கப்பட்டது. அதில் ரெமீடியசின் பெயர் தெரிவானது. இதையடுத்து, மணிவண்ணன் முதல்வர் பதவிக்கான போட்டியில் இருந்து நீக்கப்பட்டார். இரண்டாவது இரகசிய வாக்கெடுப்பில் ஆர்னோல்டும், ரெமீடியசும் மோதுவர் என்று அறிவிக்கப்பட்டது.

கலந்துரையாடலுக்கு கோரிக்கை

இதனையடுத்து சபையிலுள்ள தமது உறுப்பினர்களுடன் கலந்துரையாடவேண்டும் என றெமீடியஸ்ட கோரிக்கை விடுத்தார். அதனையடுத்து பெரும்பான்மை அதரவுடன் 10 நிமிட இடைவேளை வழங்கப்பட்டது.

 

றெமீடியஸ் விலகல் – ஆர்னோல்ட் முதல்வரானார்.

தொடந்து ஆர்னோல்டடுக்கும் றெமீடியஸ்இற்குமிடையில் இரண்டாம் சுற்று வாக்கெடுப்பு நடத்த தாயாராகியபோது றெமீடியஸ் தான் போட்டியில் இருந்து விலகுவாதாக அறிவித்தார். அதனையடுத்து இரண்டாம் சுற்று வாக்கெடுப்பு நடத்தப்படாமலே ஆனோல்ட் முதல்வராக அறிவிக்கப்பட்டார்.

 

துணை முதல்வர் தெரிவு

யாழ். மாநகர முதல்வராக அறிவிக்கப்பட்ட இம்மானுவல் ஆர்னோல்ட் அழைத்துச் செல்ப்பட்டு முதல்வருக்கான ஆடை அணிவிக்கப்பட்டு அழைத்துவரப்பட்டார். பின்னர் ஆர்னோலட் தலைமையில் துணை முதல்வர் தேர்தல் நடத்த முடிவுசெய்யப்பட்டது.  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈசன் என்பவரது பெயரைப் பிரேரித்தது. ஏனைய கட்சிகள் எவரது பெயரையும் பிரேரிக்காத நிலையில் போட்டியின்றி ஈசன் துணைமுதல்வராக அறிவிக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com