யாழ் மாநகரசபைக்கு யார் முதல்வர் …?

எதிர்வரும் உள்ளுராட்சிசபை தேர்தலில் யாழ்.மாநகரசபை முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் யாழ்ப்பாணத்து ஊடகங்களும் கட்சிகளும் மண்டையினை உடைக்கத்தொடங்கியுள்ளன.

தமிழரசு சுமந்திரன் தரப்பு தமிழரசுக்கட்சியின் யாழ் மாநகரசபை முதல்வர் வேட்பாளராக இம்மானுவேல் ஆர்னோல்ட்டை முன்னிறுத்திவருகின்றது. நேற்று தீடீரென ஊடகங்களை அழைத்த தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் மாகாணசபை உறுப்பினர் இம்மானுவேல் ஆர்னோல்டே யாழ் மாநகர முதல்வர் வேட்பாளர் என அறிவித்தார்.

உடனடியாகவே அவரது கருத்துக்கு பல்வேறு எதிர்ப்புக் கருத்துக்கள் எழுந்தன.
இதனையடுத்து நிலமைகளைச் சமாளிக்க தமிழரசுக் கட்சி நேற்று பிற்பகலில் மாநகர முதல்வர் வேட்பாளர் தொடர்பில் தேர்தல் முடியும்வரை முடிவெடுக்கப்படமாட்டாது. வீண் குழப்பங்களை உருவாக்க வேண்டாம் என அறிக்கை வெளியிட்டது. தமிழரசுக் கட்சித் கட்சி தலைவர் மாவை சேனாதிராசாவும் சுமந்திரனின் கருத்தை மறுதலித்திருந்தார்.

எனினும் உள்ளுராட்சி சபை தேர்தல் மூலம் மத ரீதியான அமைப்புக்களும் தமது களத்தை திறந்துள்ளன.மாநகர முதல்வர் தெரிவில் மதரீதியான தாக்கத்தை கருத்தில் கொள்ள இந்துசமயப்பேரவை வலியுறுத்தியுள்ளது. சுமந்திரன் தரப்பு தமிழரசுக்கட்சியின் யாழ் மாநகரசபை முதல்வர் வேட்பாளராக இம்மானுவேல் ஆர்னோல்ட்டை முன்னிறுத்துவதில் யாழ்.ஆயர் இல்லம் மும்முரமாக இருப்பதாக சொல்லப்படுகின்றது.

எனினும் அதனை மறுதலித்துள்ள ஆயர் இல்லம் சில தரப்புக்கள் தமது தேவைக்கான ஆயர் இல்ல பெயரை துஸ்பிரயோகம் செய்ய அனுமதிக்கப்போவதில்லையென தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் தனக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்த்திருந்த ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ந.வித்தியாதரன் சுரேஸ்-ஆனந்தசங்கரி கூட்டணியில் இணைந்து யோழ் மாநகர முதல்வர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தார். எனினும் அக் கூட்டணியில் வித்தியாதரனைக் களம் இறக்குவதற்கு சில அமைப்புக்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுவருவதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் வித்தியாதரன் தலைமையில் சுயேட்சை அணி ஒன்றினைக் களமிறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தககல்கள் வெளியிடப்பட்டள்ளன.

இதனிடையே கூட்டமைப்பின் குழறுபடிகள் மக்களிடையே சீற்றத்தை தோற்றுவித்திருக்கின்ற நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி வேட்பாளராக களமிறங்கும் சட்டத்தரணி மணிவண்ணனிற்கான ஆதரவு இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com