சற்று முன்
Home / முக்கிய செய்திகள் / யாழ் போதனா வைத்தியசாலையின் இருதய சத்திரசிகிச்சைப் பிரிவை மேம்படுத்த உதவுமாறு வேண்டுகோள்

யாழ் போதனா வைத்தியசாலையின் இருதய சத்திரசிகிச்சைப் பிரிவை மேம்படுத்த உதவுமாறு வேண்டுகோள்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இதய சத்திரசிகிச்சைப் பிரிவை மேம்படுத்த அரசியல்வாதிகள் , புலம்பெயர்ந்தோர் மற்றும் செல்வந்தர்கள் முன்வர வேண்டும் என வைத்திய கலாநிதி முகுந்தன் அழைப்புவிடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இதய சத்திர சிகிச்சைக்கூடம் ஆரம்பித்து ஓர் ஆண்டு நிறைவையொட்டி வைத்தியசாலைப் பணிப்பாளர் மற்றும் இதய சத்திர சிகிச்சை நிபுணர் முகுந்தன் ஆகியோர் தலமையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில் ,

இலங்கையில் 4வது இதய சத்திரசிகிச்சை கூடம் உள்ள வைத்தியசாலையாக எமது யாழ்.போதனா வைத்தியசாலை விளங்குகின்றது. வட பகுதியில் உள்ள ஒரேயொரு சிகிச்சைக் கூடம் நான் ஆரம்பித்து விட்டேன். வளர்ப்பது மக்களின் கையில்தான் உள்ளது.

ஒரேயொருவரே உள்ளேன் இன்னும் 3 சத்திர சிகிச்சை நிபுணர்கள் தேவை . அதனைப் பெற வேண்டும் தற்போது சத்திரசிகிச்சைக்காக 985 பேர் காத்திருக்கின்றனர். 100 நோயாளிகள் காத்திருந்தாலே இறுதியாக உள்ள 9 பேர் இறப்பது உறுதி என வளர்ந்த உயர்ந்த நாடுகளிலேயே உள்ள பிரச்சணை. இங்கே நீண்ட பிரச்சணை உண்டு.

இந்த ஆண்டு 72 சிகிச்சை மேற்கொண்டுள்ளோம். அதில் 66 பெரிய சிகிச்சை. எமக்குள்ள வளங்களோடு பார்த்தால் இலங்கையிலேயே எமது இடமே சிறிந்து விழங்குகின்றது. சிலர் திரிவுபடுத்திய தகவல்களையும் வெளிப்படுத்துகின்றனர். இந்த சிகிச்சைக் கூடத்தினை மேற்கொள்ள ராஜித சேனாரட்ன , ரவீந்திரன் , சத்தியமூர்த்தி போன்றருடன் பிறேமகிருஸ்னா போன்றோர் பெரும் பக்க பலமாக இருந்தனர்.

அரசியல்வாதிகள் , புலம்பெயர்ந்தோர் , செல்வந்தர்கள் இப் பிரிவை மேம்படுத்த வைத்தியசாலையினை நாடி இத்துறையை வளர்க்க முன்வர வேண்டும் என்றார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

விவசாயிகளிடம் கீரி சம்பாவை 80 ரூபாவிற்கு வாங்கி 165 ரூபாவிற்கு விற்கிறோம்

அரிசிக்கான அதிக பட்ச சில்லரை விலை நீக்கப்பட்டதை தொடர்ந்து மூன்று வகை அரிசிகளுக்கான விலையினை பாரிய ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com