சற்று முன்
Home / செய்திகள் / யாழ் போதனா வைத்தியசாலைக்குச் சென்ற 50 நோயாளரை தனியர் வைத்தியசாலைக்கு மாற்றியதாக குற்றச்சாட்டு !

யாழ் போதனா வைத்தியசாலைக்குச் சென்ற 50 நோயாளரை தனியர் வைத்தியசாலைக்கு மாற்றியதாக குற்றச்சாட்டு !

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக பதிவு செய்யப்பட்டவர்களில் 50 பேரை தனியார் வைத்தியசாலைக்கு அனுப்பியதான ஓர் முறைப்பாடு கிடைத்தது. என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இதய சத்திர சிகிச்சைக்கூடம் ஆரம்பித்து ஓர் ஆண்டு நிறைவையொட்டி வைத்தியசாலைப் பணிப்பாளர் மற்றும் இதய சத்திர சிகிச்சை நிபுணர் முகுந்தன் ஆகியோர் தலமையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வைத்தியசாலைப் பணிப்பாளர் மேலும் விபரம் தெரிவிக்கையில் ,

கொழும்பு , கண்டி , காலி வைத்தியசாலைகளில் போதிய கட்டிட வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதியும் ஏற்படுத்திய பின்பே இதய சத்திர சிகிச்சைக் கூடம் ஏற்படுத்தப்பட்டது. யாழ்ப்பாணத்தில் மட்டுமே சத்திர சிகிச்சை ஆரம்பித்த பின்பே வளங்களை தேடுகின்றோம். இந்த வசதி இங்கே உள்ளமை பலருக்கு தெரியாமலேயே உள்ளது. ஓர் ஆண்டிற்கு தற்போது 72 பேருக்கு இடம்பெரும் சத்திர சிகிச்சையினை குறைந்த்து இரட்டிப்பாக்க முயற்சிக்கின்றோம்.

நாட்டின் மிகப்பெரும் வைத்தியசாலைகளான குருநாகல், அநுராதபுரம் வைத்தியசாலைகளிலேயே இன்னும் ஆரம்பிக்கப்படாத இச் சேவையினை முகுந்தன் இவ் வைத்தியசாலையில் துணிந்து ஆரம்பித்தார். மேலும் ஒரு இருதய சத்திர சிகிச்சை நிபுணரை சுகாதார அமைச்சரிடம் கோரியுள்ளோம். இப் பிரிவிற்கான வசதிகளை அடுத்த ஆண்டு இரட்டிப்பாக்க முயற்சிக்கின்றோம்.

இதேநேரம் எம்மால் கேட்ட சத்திர சிகிச்சை நிபுணர் கிடைக்குமோ தெரியாது. இருப்பினும் எமது சேவையை அதிகரிக்கும் முயற்சி தொடரும் இதேநேரம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் தனியார் வைத்தியசாலைக்கு 50 நோயாளர்கள் மாற்ற சிபார்சு செய்த்தான குற்றச் சாட்டுத் தொடர்பில் கிடைத்த முறைப்பாடு தொடர்பில் உரிய நடவடிக்கு சிபார்சு செய்யப்பட்டுள்ளது. என்றார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com