சற்று முன்
Home / செய்திகள் / யாழ் போதனா வைத்திசாலைக்குள் வெசாக் கொண்டாட்டம் – ஓதுதல் நிகழ்வுக்கு அழைக்கும் கண் சிகிச்சை பிரிவினர் – மருத்துவர்கள் விசனம்

யாழ் போதனா வைத்திசாலைக்குள் வெசாக் கொண்டாட்டம் – ஓதுதல் நிகழ்வுக்கு அழைக்கும் கண் சிகிச்சை பிரிவினர் – மருத்துவர்கள் விசனம்

யாழ் போதனா வைத்தியசாலை கண் சிகிச்சைப் பிரிவின் ஏற்பாட்டில் யாழ் போதனா வைத்தியசாலையில் வெசாக் தினத்தை முன்னிட்டதான பிரித் ஓதும் நிகழ்வும் பிக்குகளுக்கு தானம் வழங்கும் நிகழ்வும் எதிர்வரும் 21 ஆம் திகதி ஏற்பாடு செய்திருப்பது தொடர்பில் யாழ் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களினால் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

யாழ் போதனா வைத்தியசாலை கண் சிகிச்சைப் பிரிவின் வைத்திய நிபுணர் மலரவன் தான்தோற்றித்தனமாக மேற்கொள்ளும் இந்த நடவடிக்கையானது வைத்தியசாலைக்குள் தேவையற்ற ஒன்று எனவும் வைத்தியசாலை என்பது மதங்களுக்கு அப்பாற்பட்ட மனித நேய பணிக்கான இடம் என்றும் தெரிவித்துள்ள வைத்தியர்கள் யாழ் போதனா வைத்தியசாலை கண் சிகிச்சைப் பிரிவின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்படவுள்ள வெசக் கொண்டாட்ட நிகழ்வு விரும்பத்தகாத சம்பவங்களுக்கு வழிகோலும் என்றும் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதற்கு இடமளித்ததன் மூலம் யாழ் போதனா வைத்திசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்திக்கும் இச் சம்பவத்தில் தொடர்பிருப்பதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com