யாழ் பல்கலை விஞ்ஞான பீட மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பில்!

யாழ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பல்கலைக்கழக நிர்வாகத்தால் 8 மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த புறக்கணிப்பு நடவடிக்கையில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இன்று(20) முற்பகலில் இருந்து மாணவர்கள் தமது போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். கடந்த மாதம் 19ஆம் திகதி புதிய மாணவர்கள் இருவர், தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

அதன் பின்னர், மேற்கொள்ளப்பட்ட ஒழுக்காற்று விசாரணைக்கு அமைவாக சம்பவத்துடன் தொடர்புடைய 8 மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com