யாழ். பல்கலை மாணவர்கள் சாகும்வரையான உணவுத் தவிர்ப்பில்

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ். பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தினர் சாகும் வரையான உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை இன்று (17) ஆரம்பித்துள்ளனர்.
அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகள் வவுனியா நீதிமன்றில் நடைபெற்று வந்தது. இலங்கை அரசாங்கம் அவர்களது வழக்குகளை திடீரன அனுராதபுரம் நீதிமன்றுக்கு மாற்றியது. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அரசியல் கைதிகள் மூவர் சாகும் வரையான உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் உடல்நிலை மோசமடைந்த நிலையில் அனுராதபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்யினர். இன்று அவர்களது போராட்டம் 21 நாட்களை எட்டியுள்ள நிலையிலும் இலங்கை அரசாங்கத்தினால் தீர்வு ஏதும் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் யாழ். பல்கலைக் கழக மாணவர் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக சாகும் வரையான உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com