யாழ். பல்கலை இதழியல் டிப்ளோமா மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் விழா

university of Jaffnaயாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மைய இதழியல் டிப்ளோமா கற்கைநெறி மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் விழா எதிர்வரும் 19 ஆம் திகதி சனிக்கிழமை (19-11-2016) காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
யாழ்.நகர் ஜூம்மா பள்ளிவாசல் வீதியில் உள்ள ஊடக வளங்கள் பயிற்சி மைய மண்டபத்தில் பயிற்சி மையத்தின் பணிப்பாளர் தே.தேவானந்த் தலைமையில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.
நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் கலந்துகொள்கிறார். சிறப்பு விருந்தினராக யாழ். பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி கலாநிதி க. சுதாகர் பங்கேற்பார்.
இதழியல் டிப்ளோமா பயிற்சி நெறியைப் பூர்த்திசெய்த ஐந்தாம் மற்றும் ஆறாம் ஆம் அணி முழு நேர மாணவர்கள் 15 பேர் மற்றும் மூன்றாம் அணி பகுதி நேர மாணவர்கள் இருவர் உட்பட தொத்தம் 17 பேர் இதழியல் டிப்ளோமா சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளவுள்ளார்கள்.
இதழியல் டிப்ளோமா சான்றிதழ் பெறும் மாணவர்களின் விபரங்கள் வருமாறு,
முழு நேரம் ஐந்தாம் அணி மாணவர்கள்
கலைவாணி சிறீகணேசன், புவிதா பரஞ்சோதி, விஜயந்தினி ராஜதுரை, கோவிந்தபிள்ளை அர்ச்சுனன், செல்வநாயகம் உமாசுதன், ராஜரத்தினம் யுகநாத், நிஜாம்டீன் முகமட் பர்ஷான்.
முழு நேரம் ஆறாம் அணி மாணவர்கள்
கந்தசாமி பரதன், கணேசர் சக்திவேல், சின்னப்பு கலாராஜ், சிவபாலன் திவாகரன், பத்மநாதன் பார்த்தீபன், வரதராஜா ரஜிந்தன், செபஸ்ரியாம்பிள்ளை கலிஸ்ரன், கிருத்திகா கிருஷ்ணபாலன்.
மூன்றாம் அணி பகுதி நேர மாணவர்கள்
ஸாஸி சிஷான் ஹாசன், தம்பித்துரை பிரதீபன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com