யாழ் பல்கலைக்கழக மோதலின் பின்னணியில் யார்! – சுரேஷ்பிரேமச்சந்திரன் கேள்வி

Suresh-Premachandranயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தின் பின்னால் நின்று இயக்கியவர்கள் யார் என்பது கண்டறியப்பட வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் கூறியுள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் நேற்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
மேலும், கிழக்கு மற்றும் யாழ். பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு சிங்கள மாணவர்களை பெரும்பான்மையாக உள்வாங்குவது உடனடியாக நிறுத்தப்படாவிடின், மீண்டும் ஒரு யுத்தத்திற்கு தூபம் போடும் நடவடிக்கையாக அது அமையும் என்றும் சுரேஷ் பிரேமசந்திரன் எச்சரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds