யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலைக்கு வன்மையான கண்டனங்கள் – பா.கஜதீபன்

gajatheepabயாரை எமக்கு பாதுகாப்பு என நியமித்தார்களோ, அவர்களே எம் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகியிருப்பதை இன்று உலகம் பார்க்கிறது.

நேற்று முந்தினம் நடந்த படுகொலைச்சம்பவத்தைப்போல ஒரு சம்பவம் சனநாயகமிருக்கிறது என்று சொல்லப்படும் ஒரு நாட்டின் எந்தப்பிரதேசத்திலும் நடந்திருக்குமா என்ற கேள்வி எமக்குள் எழுகிறது. ஒருவர் இருவரல்ல, ஆயுதம் தாங்கிய 05 போலீசார் நிராயுதபாணியான இரண்டு பல்கலைக்கழக மாணவர்களை சுட்டுப்படுகொலை செய்திருக்கிறார்கள்.

இந்தப்படுகொலை தென்னிலங்கையில் ஒரு பகுதியில் நடந்திருந்தால், இன்றைக்கு பல பொலிஸ்நிலையங்கள் தீக்கிரையாகியிருக்கும். சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்த முடியாத நிலைமை மட்டுமல்ல, சீருடை அணிந்த எந்தக்காவல்துறையினரும் தெருவில் நடக்கவே முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கும். ஆனால் இங்கு சட்டம் ஒழுங்கை இன்றைக்கும் எம்முடைய மக்கள் மதிக்கிறார்கள் என்பதற்கு அடையாளமாக எம்மக்கள் தமக்குள்ளேயே எவ்வளவு கோபங்கள் இருந்தாலும் சட்டத்தைத்தம் கையில் எடுக்காமல் அவதானித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

அவர்களுடைய நம்பிக்கைக்கு சாதகமான பதில் கிடைக்குமா என்பதில் அவர்களுக்குச்சந்தேகம் இருக்கிறது. ஆயினும் அமைதியாக அவதானித்தபடி தான் இருக்க்கிறார்கள். இந்த அமைதி இந்த மக்களின் இயலாமை அல்ல என்பதை சம்பந்தப்பட்ட சகலரும் விளங்கிக்கொண்டு மக்களுக்கு நீதித்துறை மீது நம்பிக்கையை ஏற்படுத்துமுகமாக மக்கள் நலன்சார்ந்த செயற்பாடுகளிலே அனைத்துத்துறையினரும் விரைவாக செயற்பட்டிட வேண்டும் எனக்கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி

பா.கஜதீபன்
வடமாகாணசபை உறுப்பினர்
யாழ்.மாவட்டம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com