யாழ். பல்கலைக்கழக சூழலில் தொடர்ந்து பதட்டம் – விஞ்ஞானபீடம் ஒரு வார காலப்பகுதிக்கு மூடல்

IMG_2392யாழ். பல்கலைக்கழக மாணவர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் காரணமாக பல்கலைக்கழக விஞ்ஞானபீடம் ஒருவார காலப்பகுதிக்கு மூடப்பட்டுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்தள்ளார்.

இதேவேளை இன்று இடம்பெற்ற மோதல் காரணமாக 10 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வுகள் இன்று சனிக்கிழமை விஞ்ஞானபீட வளாகத்தில் இடம்பெற்றன.

சிங்கள மக்களின் பாரம்பரிய நடனமான கண்டிய நடனத்துடன் சிங்கள மாணவர்களை வரவேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நடவடிக்கையால் இரண்டு மாணவ குழுக்களுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் பின்னர் கைகலப்பாக மாறியது.IMG_2397

இதன்போது பொல்லுகள் தடிகள் சகிதம் சிங்கள மாணவர்களும், தமிழ் மாணவர்களும் மோதலில் ஈடுபட்டனர்.

இந் நிலையில் மாணவர்களுக்கிடையிலான மோதல் தீவிரமடைந்ததை அடுத்து அங்கு ஏராளமான பொலிசார் குவிக்கப்பட்டு நிலமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த மோதல்களின் போது விஞ்ஞானபீட கட்டடமொன்றும் அடித்து நொருக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை பல்கலைக்கழக விடுதிகள் மற்றும் பல்கலைக்கழகத்தைச் சூழ உள்ள பகுதிகளில் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளதோடு இரவுநேர வீதி ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளமையினையும் காணமுடிகிறது.

இந்நிலையில் தற்போது யாழ்.பல்கலைகழக விஞ்ஞான பீட நுழைவாயில் , மாணவ மாணவிகளின் விடுதிகளின் நுழைவாயில்களிலும் யாழ்.பல்கலைகழக சூழலை சூழ உள்ள பகுதிகளிலும் பெருமளவான பொலிசார் மற்றும் புலனாய்வு பிரிவினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.

IMG_2408 IMG_2427 IMG_2441 newdd1

 

தொடர்புபட்ட செய்தி 

தமிழ், சிங்கள மாணவர்களுக்கு இடையில் யாழ் பல்கலைக்கழகத்தில் மோதல் – 10 பேர்வரை காயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com