சற்று முன்
Home / செய்திகள் / யாழ் பல்கலைக்கழகத்தில் தூய சக்திஆய்வுகூடம் [Clean Energy Research Laboratory (CERL)] இலங்கைக்கான நோர்வே தூதுவரால்  திறந்து வைப்பு

யாழ் பல்கலைக்கழகத்தில் தூய சக்திஆய்வுகூடம் [Clean Energy Research Laboratory (CERL)] இலங்கைக்கான நோர்வே தூதுவரால்  திறந்து வைப்பு

கடந்தவாரம் முப்பதிற்க்கு அதிகமானோரைக் கொண்ட மேற்கு நோர்வே பல்கலைக்கழக உயர்மட்டக்குழுவும், தூயசக்தித் தொழிநுட்ப தனியார்த் துறை வல்லுனர்கள்; அடங்கிய குழுவும் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டன. கடந்த வருடம் மேற்கு நோர்வே மற்றும் யாழ். பல்கலைக்கழகங்களுக்கிடையே கைச்சாத்திடப்பட்ட ஆராய்ச்சிக்கும் உயர்கல்விக்குமான தூயசக்தித் தொழிநுட்ப செயற்றிட்டத்தின் கீழ்; (http://project.jfn.ac.lk/hrncet/) இவ்விஜயத்தை மேற்கொண்ட இவர்கள் பல்வேறுபட்ட நிகழ்ச்சிகளில் கலந்து சிறப்பித்தனர்.

மே 9 ம் திகதி கொழும்பில், மேற்கு நோர்வே பல்கலைக்கழகமும், நோர்வே தூதுவராலயமும் இணைந்து ஒழுங்குபடுத்திய தூயசக்தித் தொழிநுட்ப கருத்தரங்கில், நோர்வேயிலிருந்து வருகை தந்த இக் குழுவினரும், இலங்கையிலுள்ள நூற்றுக்கும் அதிகமான தூயசக்தித் தொழிநுட்ப துறைசார் ஆய்வாளர்களும், தனியார் துறைசார் வல்லுனர்களும், பங்கேற்றதோடு தூய சக்தித் தொழிநுட்பம் சார்ந்த கூட்டு நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான உயர் மட்டக் கலந்துரையாடல்களையும் மேற்கொண்டனர்.

மே 10 ஆம் திகதி, பிரமுகர்கள் குழு கிளிநொச்சியிலுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்திற்கு விஐயம் மேற்கொண்டு, பீடத்தின் ஆய்வாளர்களுடன் எதிர்காலத்தில் செயற்படுத்தக்கூடிய கூட்டு ஆய்வு நடவடிக்கைகள் பற்றியக் கலந்தாலோசித்தது.

மே 11 இல், ஆராய்ச்சிக்கும் உயர்கல்விக்குமான தூயசக்தித் தொழிநுட்ப செயற்றிட்ட இணைப்பாளர்களான பேராசிரியரகள்; வேலாயுதபிள்ளை தயாளன், புண்ணியமூர்த்தி ரவிராஐன் அவர்களினது அயராத முயற்சியின் பயனாக நோர்வே தூதரகம் மற்றும் உயர் கல்வி அமைச்சின் நிதியுதவியுடன் யாழ் பல்கலைக்கழக பௌதிகவியற்றுறையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தூய சக்தி ஆய்வுகூடம்(Clean Energy Research Laboratory – CERL) திறந்து வைக்கப்பட்டது. பல்வேறு சவால்களின் மத்தியில் மிகக் குறுகிய காலத்தில் சுமார் 150 சதுர மீற்றர் பரப்பில் நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்ட இந்த ஆய்வுகூடம் எமது சமுகத்திலும் இலங்கையின் ஏனைய பகுதியிலும் உள்ள தூய சக்தித்துறைசார் ஆய்வாளர்களுக்கு பயனுள்ளதாக அமையுமென்பதில் ஐயமில்லை. ஆய்வுகூடத்திற்;குத் தேவையான சுமார் 20 மில்லியன் மதிப்புள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வு உபகரணங்கள் மற்றும் ஆய்வுகூடத் தளபாடங்கள் போன்றவையும் இச்செயற்றிட்ட நிதியுதவியின் கீழ் மேற்கு நோர்வே பல்கலைக்கழகத்திலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டதென்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

அன்றைய நாள் (மே 11) நிகழ்வுகள், காலை ஒன்பது மணியளவில் மங்கள வாத்தியங்கள் இசைக்க, உடுவில் இந்து இளைஞர் மன்றப் பாலர் பாடசாலைச் சிறார்கள் வரவேற்பு நடனத்தினை நிகழ்த்த, யாழ.; பல்கலைக்கழகத்தின் பதில் துணைவேந்தர், பீடாதிபதிகள், பேராசிரியர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மற்றும் விரிவுரையாளர்களால் விருந்தினர்கள் மாலையணிவித்து வரவேற்கப்பட்டனர்.

இலங்கைக்கான நோர்வேத் தூதுவர், மேன்மைதகு ThorbjØrnGaustadæther அவர்கள் புதிதாக அமைக்கப்பட்ட தூய சக்தி ஆய்வுகூடத்தை (CERL) உத்தியோகபூர்வமாகத் திறந்துவைத்தார். மங்கள விளக்கேற்றலைத் தொடர்ந்து யாழ். பல்கலைக்கழக செயற்றிட்ட இணைப்பாளர் பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஐன் அவர்கள்; வரவேற்புரை ஆற்றினார். மேற்கு நோர்வே பல்கலைக்கழக செயற்றிட்ட இணைப்பாளர் பேராசிரியர் வேலாயுதபிள்ளை தயாளன் இச்செயற்றிட்டத்தின் உருவாக்கம், அதன் ஒருவருட செயற்பாடுகள் பற்றியதொரு விளக்கவுரையை வழங்கினார். அவலது உரையைத் தொடர்ந்து யாழ் பல்கலைக்கழகத்தின் பதில் துணைவேந்தர் பேராசிரியர் மிகுந்தன் அவர்கள் உரை நிகழ்த்தினார். தொடர்ந்து தூய சக்தித் தொழில்நுட்ப முதுநிலை விஞ்ஞானமாணிக் கலைத்திட்டம்(MSc Curriculum), தூய சக்தித் தொழில்நுட்பம் தொடர்பான கையேடு(Handbook on Clean Energy Technologies) மற்றும் வெளிக்களச் செயற்பாட்டு அறிக்கை(Report on outreach activities) என்பவற்றை பதில் துணைவேந்தர் வெளியிட்டு வைக்க முதற்பிரதியை மேற்கு நோர்வேப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பெற்றுக்கொண்டார்.

ஆராய்ச்சிக்கும் உயர்கல்விக்குமான தூயசக்தித் தொழிநுட்ப செயற்திட்டத்தின் இன்னுமொரு வெற்றிப்படியே தூய சக்தித் தொழில்நுட்ப முதுநிலை விஞ்ஞானமாணிக் கலைத்திட்ட வடிவமைப்பு. இத்திட்டத்தின் கீழ் தூய சக்திதொடர்பான ஆய்வுகளில் மாணவர்கள் ஈடுபடுவதுமட்டுமல்லாது இச்செயற்திட்டத்தின் கீழ்ப் பெற்றுக்கொள்ளப்பட்ட நவீனரக ஆய்வுகூட உபகரணங்களைக் கையாளும் சந்தர்ப்பங்களையும் இம்மாணவர்கள் பெறுவர் என்பதோடுசிறப்புப் பெறுபேறுகளைப் பெறும் மாணவர்கள் நோர்வேயில் விசேட பயிற்சிகளுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்பது இ;ங்கே சுட்டிக்காட்டப்பட வேண்டியதொரு விடயமாகும். இதுதவிர இச்செயற்றிட்டத்தின் கீழ் ஆராய்ச்சிப் பட்டப்பின் படிப்பைத் தொடரும் மாணவரகள்; ஆறுமற்றும் ஒருவருட காலப்பகுதிக்கு நோர்வே சென்றுதம் ஆய்வை மேற்கொள்ளும்; வாய்ப்பினைப் பெற்றுக் கொள்ளவிருப்பதும் இச்செயற்றிட்டத்தின் ஓர் சிறப்பம்சமாகும்.

தொடர்ந்து, வெளிக்கள செயற்பாட்டு இணைப்பாளர் இணைப் பேராசிரியர் திருமதிமீனாசெந்தில்நந்தனன் அவர்களின் உரை இடம்பெற்றது. வெளிக்களச் செயற்றிட்டத்தின் கீழ் யாழ்ப்பாண விஞ்ஞானசங்கம், வடமாகாணக் கல்வித் திணைக்களத்துடன் இணைந்துஇ யாழ் மற்றும் மேற்கு நோர்வேப் பல்கலைக்கழகங்களின் அனுசரனையுடன், வடமாகாண 1AB பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 2600ற்கும் மேற்பட்டதரம் 8 முதல் 11 மற்றும் க.பொ.த (உஃத) விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பத் துறைசார்ந்த மாணவர்களுக்கு தூய சக்திதொழில்நுட்பம் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கினை நடாத்தியது.

இக்கருத்தரங்கில் பெற்றுக்கொள்ளப்பட்ட பின்னூட்டல் கருத்துக்களின் அடிப்படையில் தூயசக்த்தித் தொழில்நுட்பம் சார்ந்ததொருகையேட்டின் அவசியம் உணரப்பட்டது. இத்தேவையைப் பூர்த்திசெய்யும் நோக்கில் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத் துறைசார்ந்தவர்களின் முயற்சியின் விளைவாக தூய சக்தித் தொழில்நுட்பம் தொடர்பானகையேடு(Handbook on Clean Energy Technologies) வெளியிடப்பட்டது. பலரது வேண்டுகோளுக்கிணங்க, இனிவரும் காலங்களில் இக்; கையேடானது தமிழ் மொழியில் மொழிப் பெயர்க்கப்படவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. தூய சக்தித் தொழில்நுட்பம் தொடர்பான பாடசாலை மாணவர்களுக்கிடையிலான போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களிற்கான சான்றிதழ் மற்றும் பரிசில் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

வெளியீட்டுநிகழ்வைத் தொடர்ந்துஇ அடுத்த ஆண்டின் முற்பகுதியில் நடைபெறவுள்ள தூய சக்தித் தொழில்நுட்பம் தொடர்பான சர்வதேசமாநாட்டிற்கான வலைத்தளம் (http://conf.jfn.ac.lk/icncet/) உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. அந்நிகழ்வைத் தொடர்ந்து நோர்வேயிலிருந்து வருகைதந்த முக்கியபிரமுகர்களின் உரையுமஇ; அதைத் தொடர்ந்து இச் செயற்றிட்டத்தின் கீழ் மேற்குநோர்வேப் பல்கலைக்கழகத்தில் ஆய்வுகளை மேற்கொண்ட யாழ் மற்றும் பேராதனைப்பல்கலைக்கழக ஆய்வுமாணவர்களான சிவா உதயராஐ; மற்றும் அசித்த உதயங்க ஆகியோரின் அனுபவப் பகிர்வும் இடம்;பெற்றது.

தொடர்ந்து பிரதமவிருந்தினர் இலங்கைக்கான நோர்வேத் தூதுவர் மேன்மைதகு ThorbjØrnGaustadæther அவர்களின்; உரை இடம்பெற்றது. இறுதியில் மேற்கு நோர்வே பல்கலைக்கழககணித, பௌதிகவியல், கணணிவிஞ்ஞானத் துறைத் தலைவர் Dr. Kristin FanebustHetland அவர்கள் நன்றியுரை ஆற்றியதோடு தேசிய அடிப்படைக்கல்வி நிறுவன ஆய்வுப் பேராசிரியர் G. R. A குமார அவர்களின் சூரியப்படல் தொடர்பானபிரயோகச் செய்முறைவிளக்கமும் இடம்பெற்றது. இச் செய்முறைவிளக்கம் குறிப்பாக பாடசாலை மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந் நிகழ்வில் நோர்வேயைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், செய்தியாளர்கள் மற்றும் யாழ் பல்கலைக் கழகப்பேரவை உறுப்பினர்கள், பீடாதிபதிகள், பேராசிரியர்கள், இளநிலைப் பட்டப்படிப்புமாணவர்கள், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களெனச் சுமார் நூற்றிக்கும் அதிகமானோர் பங்குபற்றியிருந்தனர்.

இப்பாரிய செயற்றிட்டமானது 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மேற்கு நோர்வே பல்கலைக்கழகத்திலிருந்து வருகை தந்த உயர் மட்டத் தூதுக்குழு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துடன் (UoJ) கைச்சாத்திட்டஉடன்படிக்கையின் கீழ் இலங்கைக்கான நோர்வே தூதுவராலயமும், சர்வதேச கல்விக் கூட்டிணைவுக்கான நோர்வேயின் மையமும் (Norwegian Centre for International Cooperation in Education (SIU) ) வழங்கிய 200 மில்லியன் ரூபா பெறுமதியான நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்படுகின்றது. யாழ். பல்கலைக்கழக வரலாற்றில்; முதன் முறையாக முப்பதிற்கும் மேற்ப்பட்ட சர்வதேச துறைசார் வல்லுனர்கள் பங்குகொண்ட இந் நிகழ்வு பலராலும் பாராட்டப்பட்டமை இங்கே குறிப்பிட்டு கூறத்தக்க விடயமாகும்.

பல்வேறு சிறப்புக்களைக் கொண்ட மைந்துள்ள இச்செயற்றிட்டம் உருவாக மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்ட மேற்கு நோர்வே பல்கலைக்கழக செயற்திட்ட இணைப்பாளரும், பௌதிவியல், தொழிநுட்பவியல் பேராசிரியருமான வேலாயுதபிள்ளை தயாளன் அவர்கள் மேற்கு நோர்வே, யாழ். பல்கலைக்கழக சமூகத்தினரால் நன்றியுடன் பாராட்டப்பட்டார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com