யாழ்.பல்கலைகழக ஊழியர் சங்கம் மறியல் போராட்டம்.

யாழ்.பல்கலைகழக ஊழியர் சங்கம் சில கோரிக்கைகளை முன் வைத்து ஒரு மணிநேர மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ்.பல்கலைகழக வாயிலை மறித்து வியாழக்கிழமை மதியம் 12 மணி முதல் 1 மணி வரையில் குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.
ஓய்வுதிட்டத்தினை மறுபரிசீலனை செய்க, ஓய்வுத்திட்டத்தில் பாரபட்சம் காட்டக்கூடாது, சகல பல்கலைக்கழக ஊழியர்களுக்கும் பொது காப்புறுதி திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், மொழிக் கொடுப்பனவு மீள வழங்கல், சொத்துக் கடன் தொகை அதிகரித்தல், மாதாந்த இழப்பீட்டு படியை அதிகரித்தல், அரசியல் தலையீடற்ற நியமனம், வினைத்திறனற்ற ஊழியர் பணிநீக்கம் போன்ற கோரிக்கைகளை முன் வைத்தே போராட்டத்தை முன்னெடுத்தனர்.

குறித்த கோரிக்கைகளை நிறைவேற்ற தவறும் பட்சத்தில் எதிர்வரும் 2ம் திகதி பல்கலைகழக மானிய ஆணைக்குழுவின் முன்பாக அனைத்து பல்கலைகழக தொழிற்சங்க சம்மேளனத்தின் கூட்டுக்குழுவுடன் சேர்ந்து பாரிய போராட்டத்தை முன்னெடுக்க  உள்ளோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds