சற்று முன்
Home / செய்திகள் / யாழ்-பலாலி 764 இலக்க வழித்தட தனியார் பேருந்து சாரதிமீது இ.போ.ச சாரதி தாக்குதல் – கோண்டாவில் சாலை முன் தனியார் சாரதிகள் போராட்டம்

யாழ்-பலாலி 764 இலக்க வழித்தட தனியார் பேருந்து சாரதிமீது இ.போ.ச சாரதி தாக்குதல் – கோண்டாவில் சாலை முன் தனியார் சாரதிகள் போராட்டம்

இலங்கை பேக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான அக்கரைப்பற்று வழித்தட பேருந்து 764 இலக்க யாழ்ப்பாணம் பலாலிவீதி வழித்தடத்தில்
இன்று (10) காலை முறையற்ற விதத்தில் பயணிகள் சேவையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவத்தையடுத்து இ.போ.ச மற்றும் தனியார் போக்குவரத்து சாரதிகளுக்கு இடையில் ஏற்பட்ட
முரண்பாடு கைகலப்பில் முடிந்துள்ளது.
இதன்போது கோண்டாவில் சாலைக்கு முன்பாக தனியார் பேருந்து மறிக்கப்பட்டு அக்கரைப்பற்று
வழித்தட பேருந்து சாரதி மற்றும் கோண்டாவில் சாலையில் பணியாற்றிய சிலரால் தாக்கப்பட்டு கோண்டாவில்
சாலைக்குள் இழுததுச் செல்லப்பட்டதாக குற்றஞ்சாட்டியுள்ள தனியார் பேருந்து சாரதிகள் கோண்டாவில் சாலைக்கு
முன்பாக பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து எம்மிடம் பேசிய 764 வழித்தட தனியார் பேருந்து சாரதிகள் குறித்த வழித்தடத்தினூடான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும்
தாக்குதல் மேற்கொண்ட நபர்களை கைது செய்து நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்படாதுவிடின் முழு அளவிலான பணிப்புறக்கணிப்பில்
ஈடுபடப்போவதாகவும் தெரிவித்துள்ளர்.

இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்துகள் முன்னரும் இவ்வாறு முறையற்ற விதத்தில் நடைந்துகொள்கின்றபோதும்
சமரசமாக தாம் பிரச்சனைகளை பெரிதாக்காது விலகிச் செல்வதாகவும் அதன் பலாபலனை இ.போ.ச சாரதிகள் இன்று தமது சாரதியைத் தாக்கியதன்
மூலம் ஏற்படுத்திக் கொடுத்துவிட்டனர் எனவும் இம்முறை சமரச முயற்சிக்கு தாம் தயாரில்லை எனவும் தெரிவித்த அவர்கள் கைதின் ஊடாக நீதிமன்ற நடவடிக்கை ஒன்றினை
மேற்கொள்ளவேண்டும் என்பதே தமது கோரிக்கை எனவும் தெரிவித்துள்ளனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com