சற்று முன்
Home / செய்திகள் / யாழ். பண்ணை தொலைத்தொடர்புக் கோபுரம் முறிந்து விழுந்தது – வீதியால் சென்ற பெண் ஒருவருக்கு காயம்

யாழ். பண்ணை தொலைத்தொடர்புக் கோபுரம் முறிந்து விழுந்தது – வீதியால் சென்ற பெண் ஒருவருக்கு காயம்

யாழ். பண்ணை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிறிலங்கா ரெலிக்கொம்மிற்குச் சொந்தமான தொலைத் தொடர்பு கோபுரம் முறிந்து விழுந்ததில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இலங்கையில் மிக உயர்ந்த தொலைத்தொடர்புக் கோபுரமாக இருந்த 184 மீற்றர் உயரமான இந்த தொலைத் தொடர்புக் கோபுரத்தை சூழ இழுவைக்காக அமைக்கப்பட்டிருந்த சுமார் 12 ஸ்ரே கேபிள்களில் பலவீதிகளின் குறுக்காக செல்வதனால் அதன் இடர்பாடுகள் குறித்து முறைப்பாடுகள் பல தெரிவிக்கப்பட்டுவந்த நிலையில் புதிதாக ஒரு கோபுரம் நிர்மாணித்த நிலையில் இக் கோபுரத்தைக் கழற்றும்பணி நடைபெற்றுவந்துள்ளது. சுமார் 100 மீற்றர்வரை கழற்றப்பட்ட நிலையில் ஏனையவற்றையும் கழற்றும் பணி இன்று நடைபெற்றுள்ளது. உயரத்தின் சில பகுதிகளைக் குறைத்துவிட்டு கீழிறங்கிய பணியாளர்கள் மூவர் கோபுரத்தைத் தாங்கியிருந்த ஸ்ரே கேபிள்கள் ஐந்தில் நான்கினைக் கழற்றிவிட்டு உணவருந்தச் சென்றபோது இழுவைச் சமநிலையை இழந்த கோபுரம் அடியோடு சாய்ந்து விழுந்துள்ளது.

இதன்போது வீதியால் பயணித்து கொண்டிருந்த பெண் ஒருவர் கோபுரத்தின் கம்பி தாக்கியதில் காயமடைந்துள்ளார். பணியாளர்கள் எவருக்கும் எதுவித காயங்களும் ஏற்பட்டிருக்கவில்லை.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com