யாழ் நோக்கி சென்ற ரயிலுடன் கார் மோதி கோர விபத்து – ஒருவர் பலி

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற புகையிரதத்துடன் கார் ஒன்று மோதி ஏற்பட்ட பாரிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். 

காரில் நால்வர் பயணித்துள்ளதுடன் ஏனைய மூவரும் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அதி சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இன்று நண்பகல் 1.30 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சேரி வீதியுடாக சென்ற கார் ஒன்று புகையிரத கடவையின் ஊடாக பயனித்தபோது புகையிரத வண்டியுடன் மோதியுள்ளதாக பொஸிசார் தெரிவிக்கின்றன. 

சம்ப இடத்தில் இருந்து 100 மீற்றர் தூரம் வரை கார் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக நேரில்கண்ட மக்கள் தெரிவிக்கின்றனர். 

மேலும் இப்பகுதியில் புகையிரத கடவை இல்லாமையினால் இவ் விபத்து எற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். 

இது தொடர்பான விசாரணைகளை பொஸிசார் மேற்கொண்டு வருகின்றனர். 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds