சற்று முன்
Home / செய்திகள் / யாழ் நீர்வேலி பகுதியில் ஐஸ்கிறீம் வேன் இனந்தெரியாதோரால் எரிப்பு

யாழ் நீர்வேலி பகுதியில் ஐஸ்கிறீம் வேன் இனந்தெரியாதோரால் எரிப்பு

ஜஸ்கீறிம் விற்பனையில் ஈடுபடும் வாகனம் ஒன்று இனந்தெரியாத நபர் களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்று அதிகாலை 3.10 மணி யளவில் நீர்வேலி அரசகேசரி பிள்ளையார் ஆலய வீதியில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும்
தெரியவருவதாவது,
குறித்த ஐஸ்கிறீம் விற்பனையில் ஈடுபடும்  வாகனமானது நேற் றுமுன்தினம் பகல் பொழுதில் வியாபார நடவடிக்கையில் ஈடு பட்டதன் பின்னர் இரவு 7 மணியளவில் தின மும் வாகனம் தரித்து நிற்கும் இடமான அர சகேசரி பிள்ளையார் ஆலய வீதியில் நிறுத் தப்பட்டுள்ளது.
இதன் பின்னரே நள்ளிரவு நேரம் இனந் தெரியாத விசமி களால் 16 இலட்சம் பெறுமதியான குறித்த வாகனம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
இரவு தீ கொழுந்து விட்டு எரிந்த வாக னத்தினை கண்ட  அயலில் இருந்த சிலர் தீயை அணைக்க முற்பட்ட போதும் அது பலனளிக்காமல் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
இச்சம்பவம் தொடர் பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த கோப் பாய் பொலிஸார் அப் பகுதி இளைஞர்களு டன் இணைந்து தீயை அணைத்து கட்டுப் பாடுக்குள் கொண்டு  வந்து அருகிலுள்ள வியாபார நிலையங் களுக்கும் தீ பரவா மல் தடுத்ததுடன் விசாரணைகளை யும் மேற் கொண்ட துடன் மேலதிக விசா ரணையும் ஆரம்பித் துள்ளனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com