யாழ் நீதிமன்ற தாக்குதல் சம்பவம் – மூவருக்கு பிடியாணை

யாழ்ப்பாணம் நீதிமன்றக் கட்டடத் தொகுதி மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் மூன்று சந்தேகநபர்களுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

சுன்னாகம் பகுதியை சேர்ந்த மூன்று இளைஞர்களுக்கு எதிராகவே யாழ். நீதவான் சின்னதுறை சதீஸ்தரன் இன்று இந்தப் பிடியாணை உத்தரவை வழங்கியுள்ளார். 

யாழ். நீதிமன்றக் கட்டடத் தொகுதி மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை யாழ் நீதவான் நீதிமன்றத்தில் இன்று இடம்பெற்றது. 

இதன்போது சம்பவத்துடன் தொடர்புடைய 72 சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். எனினும் 65, 66 மற்றும் 67ம் இலக்க சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகவில்லை. 

விசாரணைகளை அடுத்து குறித்த மூன்று சந்தேகநபர்களுக்கும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டதுடன், அடுத்த விசாரணையின் போது, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும் நீதவான் சின்னதுறை சதீஸ்தரன் உத்தரவிட்டுள்ளார். 

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகள் எதிர்வரும் ஜூன் 13ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds