சற்று முன்
Home / செய்திகள் / யாழ் நகர வேலைகளுக்கு இராணுவத்தை பயன்படுத்தும் ஆர்னோல்ட்ற்கு சபையில் கடும் எதிர்ப்பு

யாழ் நகர வேலைகளுக்கு இராணுவத்தை பயன்படுத்தும் ஆர்னோல்ட்ற்கு சபையில் கடும் எதிர்ப்பு

இலங்கை இராணுவத்தை சிவில் வேலைகளில் பயன்படுத்தக்கூடாதென்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கடும் எதிர்ப்பிற்கு முதல்வர் ஆனோல்ட் பணிந்துள்ளார்.

இன்றைய யாழ்.மாநகரசபை அமர்வின் போது முன்னணி உறுப்பினர் வி.மணிவண்ணன் நேற்று முதல் மரநடுகை திட்டத்தில் படையினரை களமிறக்க மேற்கொண்டுள்ள முயற்சிக்கு கடுமையான கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.

இலங்கை இராணுவ பிரசன்னத்தை பேணும் வகையிலாக சிவில் நடவடிக்கைகளில் அவர்களை பயன்படுத்த முயலும் முதல்வர் ஆனோல்டின் முயற்சிக்கு மாநகர சபை இன்றைய அமர்வின்போதே வி.மணிவண்ணன் கடுமையான கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.

இதனை தொடர்ந்து நடைபெற்ற காரசாரமான விவாதத்தின் பின்னர் படையினரை யாழ்.மாநகரசபைகளது வேலகளில் இணைத்துக்கொள்வதில்லையென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முன்னராக யாழ் மாநகர வேலைகளுக்கு படையினரை ஈடுபடுத்துவது குறித்து வடக்கு மாகாண ஆனுநருடன் யாழ் மாநகர முதல்வர் ஆர்னோல்ட் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியிடப்பட்டிருந்போது ஆர்னோல்ட் அதனை கடுமையாக மறுத்திருந்தார். எனினும் நேற்று ஆரம்பிக்கப்பட்ட மரநடுகை வேலைத்திட்டத்தில் ஆர்னோல்ட் படையினரை ஈடுபடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com