யாழ், திருமலையில் வௌ்ளம் – மக்கள் இடம்பெயர்வு

கடும் மழை காரணமாக யாழ். மாவட்டத்தில் 9 ஆயிரத்து 51 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இன்று இரவும் யாழ் குடாநாட்டில் தொடர்ச்சியாக கடும்மழை பெய்துவருவதால் மக்கள் இடம்பெயர்வு மேலும் அதிகரிக்கலாம் அஞ்சப்படுகின்றது.

மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கான சமைத்த உணவுகள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் ஏற்பாட்டில் வழங்கப்பட்டு வருகின்றது. 

அத்துடன் தரப்பால் மற்றும் நிலவிரிப்புக்களை அந்தந்த பிரதேச செயலாளர்களிடம் தகவல் திரட்டி வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் கூறினார். 

இதேவேளை திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக 1506 குடும்பங்களைச் சேர்ந்த 5946 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குச்சவௌி பிரதேசத்தில் பாலர் பாடசாலையொன்றில் 40 குடும்பங்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அம் மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார இன்று குறிப்பிட்டார். 

குச்சவௌி, கிண்ணியா, பட்டினமும் சூழலும் பிரதேசங்களில் வௌ்ளநீர் தேங்கி நிற்பதால் பிரதேச சபைகளின் ஊடாக பெக்கோ இயந்திரங்களை பயன்படுத்தி வடிகான்களை வெட்டி நீரை வடியச் செய்யுமாறும் பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அவர் இங்கு குறிப்பிட்டுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds