சற்று முன்
Home / செய்திகள் / யாழ் கொரோனா நோயாளி தாவடியைச் சேர்ந்தவர் !!

யாழ் கொரோனா நோயாளி தாவடியைச் சேர்ந்தவர் !!

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர் தாவடிப் பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய கட்டிட ஒப்பந்தகாரர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் அல்ல என்றும், அவர் மத போதகர் நடத்திய கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றும் தெரியவந்துள்ள அதேவேளை தேவாலயம் ஒன்று அமைப்பதற்கான கட்டட நிர்மாணம் தொடர்பில் குறித்த போதகருடன் தொடர்பில் இருந்ததுடன் தேவாலயத்திலுள்ள தனி அறையில் போதகரைச் சந்தித்திருந்தார் என்றும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த மதபோதகருக்கு கொரோனொ தொற்று ஏற்பட்டதாக நேற்று காலை செய்திகள் பரவிய நிலையில் தனக்கு காய்ச்சல் உள்ளதால் தானும் போதகரைச் சந்தித்து பழகியவர் என்ற அடிப்படையில் தானாக முன்வந்து வைத்தியசாலையில் தெரிவித்ததன் அடிப்படையிலேயே அவரிடம் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே குறித்த நபர் கொரோனா நோயாளியாக அடையாளங்காணப்பட்டுள்ளார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com