சற்று முன்
Home / செய்திகள் / யாழ் கிளிநொச்சி மாவட்ட ஜம்மியதுல் உலமா தலைவராக அஷ்ஷெய்க் பி.ஏ.எஸ் சுபியான் மௌலவி

யாழ் கிளிநொச்சி மாவட்ட ஜம்மியதுல் உலமா தலைவராக அஷ்ஷெய்க் பி.ஏ.எஸ் சுபியான் மௌலவி

யாழ் கிளிநொச்சி மாவட்ட ஜம்மியதுல் உலமா தலைவராக அஷ்ஷெய்க் பி.ஏ.எஸ் சுபியான் மௌலவி ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் (17) அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ முபாறக் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அஷ்ஷெய்க் எல்.எஸ் நௌபர் ஆகியோர் முன்னிலையில் சின்னப்பள்ளிவாசலில் நடைபெற்ற யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட ஜம்மியதுல் உலமா சபை கூட்டத்தில் மேற்படி தெரிவு நடைபெற்று ஏகமனதாக சுபியான் மௌலவி நியமிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட ஜம்மியதுல் உலமா சபை கடந்த கால தலைவர்களின் செயற்பாடுகள் தொடர்பில் எழுந்த விமர்சனங்களிற்கு தற்போதைய தலைவரின் நியமனத்தின் மூலம் தீர்வு பெற்று கொடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் புதிதாக அங்கீகரிக்கப்பட்டு தெரிவான யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட ஜம்மியதுல் உலமா சபை தலைவர் சுபியான் மௌலவியின் வேண்டுகோளிற்கமைய யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட ஜம்மியதுல் உலமா சபை மூலம் வறிய 10 குடும்பங்களுக்கு தலா பத்து கூரைத்தகடுகள் வழங்கி வைக்கபட்டது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ஆரியகுளத்தில் மத அடையாளங்களுக்கு இடமில்லை !

யாழ் மாநகர சபைக்கு சொந்தமான ஆரியகுளத்தில் எந்த விதமான மத அடையாளங்களையும் அமைக்க அனுமதிக்க முடியாது ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com