யாழ். காரைநகர் பிரதேசசபையின் தேசிய வாசிப்பு மாத இறுதி நாள் நிகழ்வுகள்

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு, யாழ். காரைநகர் பிரதேசசபையின் தேசிய வாசிப்பு மாதத்தின் இறுதிநாள் நிகழ்வுகள் 29.11.2017 அன்று மதியம் 1.30 மணியளவில் காரைநகர் வலந்தலை பிரதேசசபை மாநாட்டு மண்டபத்தில் காரைநகர் பிரதேசசபை செயலாளர் திருமதி சா. உருத்திரசம்பவன் தலைமையில் சிறப்புற நடைபெற்றது.

இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ். மாவட்ட வடக்கு மாகாணசபை உறுப்பினர் கனகரட்ணம் விந்தனும் சிறப்பு விருந்தினர்களாக காரைநகர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு. ஆ. குமரேசமூர்த்தி மற்றும் சனசமூக நிலையங்களின் அபிவிருத்தி உத்தியோகத்தர் செல்வி. மு. அருந்த~h ஆகியோரும், கௌரவ விருந்தினர்களாக காரைநகர் இலங்கை வங்கி முகாமையாளர் திரு. வே. புவனேந்திரராஜா, காரைநகர் தேசிய சேமிப்பு வங்கி முகாமையாளர் திரு. தி. மயூரன், காரைநகர் புதுவீதியைச் சேர்ந்த தொழிலதிபர் திரு. ச. சிவஞானம், களபூமியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மருந்தாளர் திரு. வே. வீரசிங்கம் மற்றும் காரைநகர் விளானைச் சேர்ந்த வு. சிவாமகேசன், காரைநகர் வியாவில் ஐயனார் கோவில் தலைவர் திரு. கே. சோமசேகரம் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

மேலும் இந் நிகழ்வில், வாசிப்பு மாதத்தை முன்னிட்டு மாணவர்களுக்கிடையே நாடாத்தப்பட்ட பேச்சு, கவிதை, கட்டுரை, கதைசொல்லும் நேரம் போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டிய மாணவர்களுக்கும், பெரியவர்களுக்கும் மாணவர்களுக்கும் நடைபெற்ற காரைநகர் தொடர்பான பொது அறிவுப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றியீட்டயவர்களுக்கும் பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டதுடன், முன்பள்ளி மாணவர்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com