சற்று முன்
Home / செய்திகள் / யாழ் கலட்டியில் வீடு ஒன்றின்மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்

யாழ் கலட்டியில் வீடு ஒன்றின்மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்

யாழ்ப்பாணம், கலட்டி பகுதியில் இனந்தெரியாத நபர்களினால் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நேற்று இரவு இடம்பெற்ற இத் தாக்குதல் சம்பவத்தில் குறித்த வீடு பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸாரை தொடர்பு கொண்டு கேட்ட போது, ​​நேற்று (16) இரவு சம்பவம் இடம்பெற்றதாகவும் இனந்தெரியாத நபர்களினால் குறித்த வீடு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும், அப்பகுதி மக்கள் குறித்த தாக்குதலை அவா குழுவே செய்ததாக சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளனர்.

யாழ். பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com