யாழ்ப்பாணம் உரும்பிராயைச் சேர்ந்தவரெனக் கூறப்படும் இளைஞன் ஒருவர் வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியில் உள்ள விடுதி ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றிலிருந்து இளைஞன் ஒருவரின் சடலம் இன்று(13.04.2018) மாலை 3மணியளவில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியை சேர்ந்தவரெனக் கூறப்படும் 30வயதுடைய அந்தோணி நிக்சன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நஞ்சருந்தி தற்கொலை செய்தமைக்கான அடையாளங்கள் சடலத்தின் அருகில் காணப்படுவதால் குறித்த நபர் தற்கொலை செய்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
இதேவேளை குறித்த இளைஞன் கடந்த முதலாம் திகதி முதல் குறித்த விடுதியில் தங்கியிருந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
தற்போது சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரனைகளை வவுனியாப் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.