காரை தூக்கி பந்தாடியது ரயில் – மயிரிழையில் தப்பினார் மருத்துவர் – யாழில் விபத்து

காங்கேசன்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த ரெயில் மீது கார் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று நண்பகல் 01.40 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் யாழ் போதனாவைத்தியசாலை மருத்துவரான பெண் ஒருவரின் காரே விபத்திற்குள்ளாகியுள்ளது. காரின் பின் பகுதியில் ரெயில் மோதியநிலையில் கார் தூக்கி வீசப்பட்டு கடும்சேதமடைந்துள்ளது. எனினும் அதில் பயணித்த மருத்துவருக்கு எதுவித காயமும் ஏற்பட்டிருக்கவில்லை. யாழ்ப்பாணம் இந்துமகளிர் கல்லூரிக்கு அருகாமையிலுள்ள பாதுகாப்பற்ற ரெயில் கடவையைக் கடக்க முற்பட்டபோதே இவ் விபத்து நிகழ்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com