சற்று முன்
Home / செய்திகள் / யாழ் இந்து மகளிர் கல்லுரி அருகிலுள்ள புகையிரதக் கடவையில் தொடர்ந்து நிகழும் விபத்துக்கள்

யாழ் இந்து மகளிர் கல்லுரி அருகிலுள்ள புகையிரதக் கடவையில் தொடர்ந்து நிகழும் விபத்துக்கள்

யாழ்.இந்து மகளீர் கல்லூரிக்கு அருகில் உள்ள புகையிரத கடவையில் தொடர்ச்சியாக விபத்துக்கள் நிகழ்ந்தவண்ணமுள்ளபோதும் அதன் பாதுகாப்புக் குறித்து எவரும் அக்கறை கொண்டிருக்கவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த மாதம் ஒருவர் விபத்திற்குள்ளாகி நீண்டதூரம் இழுத்துச் செல்லப்பட்ட போதும் மயிரிழையில் உயிர்தப்பினார்.

அதற்கு முன்னரும் பல்வேறு விபத்துக்கள் குறித்த கடவையில் இடம்பெற்றுள்ளன. வைத்தியர் ஒருவர் சில மாதங்களுக்கு முன் குறித்த கடவையில் விபத்தில் சிக்கிக்கொண்டார்.

ஆரம்பப் பிரிவு மற்றும் உயர்தரப் பாடசாலை என அதிக மாணவர்களைக் கொண்ட யாழ்ப்பாணம் இந்து மகளீர் கல்லூரியை அண்டியதாக குறித்த கடவை உள்ளது. இந்நிலையில் குறித்த கடவையின் பாதுக்காப்புக்குறித்த பாதுகாப்புக் கடவையில் ஈடுபடுபவர்கள் அசண்டையீனமாக நடந்துகொள்வதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

இநே்நிலையில் இன்று கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி சென்று கொண்டிருந்த புகையிரத்துடன் குறித்த கடவையைக் கடக்க முற்பட்டபோது லான்ட்மாஸ்ரர் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

அதன் போது லான்ட்மாஸ்ரர் சாரதி மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com