சற்று முன்
Home / செய்திகள் / யாழ் இந்துவிற்கு 12மில்லியன் ரூபா நிதி உதவி – 125 ஆவது ஆண்டுவிழாவில் கல்வி அமைச்சர்

யாழ் இந்துவிற்கு 12மில்லியன் ரூபா நிதி உதவி – 125 ஆவது ஆண்டுவிழாவில் கல்வி அமைச்சர்


(25.09.2015) யாழ்.இந்து கல்லூரியின் 125வது ஆண்டு விழா நிறைவு நாள் நிகழ்வு நேற்றைய தினம் இந்து கல்லூரியில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

கல்லூரி அதிபர் தயாநந்தராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்லூரியின் 125வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பு பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் தபால் தலை ஒன்றும் வெயிடப்பட்டது, இதன் முதற்பிரதியையும் கௌரவ கல்வி அமைச்சர் அகில விராஸ் காரியவம்சம் பெற்றுக்கொண்டார்.

மேலும் பல்வேறு கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் கல்லூரியின் கடந்தகால பதிவுகள் அடங்கிய நூல் ஒன்றும் வெளியிடப்பட்டது.

சிறுவர் விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் திரு விஜயகலா மகேஸ்வரன்,பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், மற்றும் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அங்கு உரையாற்றிய கல்வி அமைச்சர் அகிலவிராச் காரியவசம், யாழ்.இந்துக்கல்லூரிக்கு 3மாடிக்கட்டடம் மற்றும் மலசலகூட வசதிகளை அமைத்துக் கொடுக்க 12மில்லியன் ரூபா நிதியை ஒதுக்க தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

யாழ்.இந்துக்கல்லூரி மிகச் சிறந்த பாடசாலையாக விளங்குகின்றது. மாணவர்கள் கல்வி கற்பதற்கு போதிய இடவசதியில்லை. மற்றும் மலசலகூடவசதிகள் போதியளவு இல்லை போன்ற விடயங்கள் தொடர்பில் பாடசாலை சமூகத்தினர் என்னிடம் தெரிவித்துள்ளனர்.அவர்களின் கருத்தை உள்வாங்கி யாழ்.இந்துக்கல்லூரிக்கு 10மில்லியன் ரூபா செலவில் 3மாடிக்கட்டடமும்,2மில்லியன் ரூபா செலவில் மலசலகூடவசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பேன் எனவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையிலே உயர்தரத்தில் கணிதத் துறையில் முதலிடம் பிடித்த பாடசாலையாக யாழ்.இந்து விளங்குவது பாராட்டத்தக்க விடயமாகும்.

எனது தந்தையின் வழியில் இருந்து தமிழ் மக்களின் நலன் முக்கியப்படுத்தப்பட்டு பேணப்பட்டு வந்தது.

அதேபோல நானும் தமிழ் மக்களின் நம்பிக்கைக்கு காத்திரமாக நடந்து கொள்வேன்.கல்வி அமைச்சின் கொள்கை வேறுபாடின்றி அனைவருக்குமே கல்வி என்ற நிலைப்பாடு,ஜனாதிபதி,பிரதமர் கூறியிருக்கின்றனர் இலங்கையில் வேறுபாடின்றி அனைவருக்கும் கல்வியை சமமாக புகட்ட வேண்டும்.

இலங்கையின் எதிர்காலம் கல்வியிலேயே தங்கியுள்ளது என்பது முக்கியவிடயமாகும். எனவே தமிழ் மக்களின் நலனுக்காகவும்,அவர்களின் எதிர்கால வாழ்வுக்காகவும் அயராது பாடுபடுவேன் என்றார்.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com