யாழ்-அரசடி வீதியில் வாள் வெட்டுத் தாக்குதல் – கடைக்கு தீ வைப்பு

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் பின்புறமாக அரசடி வீதியில் உள்ள கடையொன்றினுள் நேற்றிரவு 7.15 மணியளவில் நுழைந்த இனந்தெரியாத பத்துப்பேர் அடங்கிய கும்பல் கடையில் வேலை செய்யும் இரு இளைஞர்களை வாளால் வெட்டியதுடன் கடையையும் தீயிட்டு கொழுத்தி உள்ளது.
இச்சம்பவத்தில் கஜலக்சன் (24 வயது) மற்றும் அஜித்( 20 வயது) என்பவர்களே வாள் வெட்டுக்கு இலக்காகி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு மாநகர தீயணைப்பு படை விரைந்து வந்து தீயை அணைத்துள்ளனர்.
கடையினுள் உள்ள சீ.சி.ரி கமெராவில் அனைத்தும் பதிவாகியுள்ள போதும் மர்ம நபர்கள் முகத்தினை மறைத்து தலைக்கவசம் அணிந்த நிலையில் வந்துள்ளனர். எனினும் அவர்களின் மோட்டார் சைக்கிள் இலக்கங்கள் சீ.சி.ரி கமெராவில் பதிவாகியுள்ளதாகத் தெரியவருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com