சற்று முன்
Home / செய்திகள் / யாழ்ப்பாணம் பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் ஆடை வடிவமைத்தல், அழகுக்கலை மற்றும் மனைப்பொருளியல் கண்காட்சி

யாழ்ப்பாணம் பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் ஆடை வடிவமைத்தல், அழகுக்கலை மற்றும் மனைப்பொருளியல் கண்காட்சி

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் அனுசரணையுடன் யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் பிரிவால் நடாத்தப்படும் யாழ்ப்பாணம் மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் ஆடை வடிவமைத்தல், அழகுக்கலை, மற்றும் மனைப்பொருளியல் கண்காட்சி யாழ். பரியோவான் கல்லூரிக்கு முன்பாக அமைந்துள்ள யாழ்ப்பாணம் பிரதேச செயலக பழைய கட்டடத் தொகுதியில் இயங்கிவரும் யாழ்ப்பாணம் மகளிர் அபிவிருத்தி நிலையத்தில்; இன்று (21.02.2018) யாழ்ப்பாணம்; பிரதேச செயலாளர் பொன்னம்பலம் தயானந்தன் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்வின் முதன்மை விருந்தினராக யாழ். மாவட்ட வடக்கு மாகாணசபை உறுப்பினர் என். கனகரட்ணம் விந்தனும் , சிறப்பு விருந்தினர்களாக யாழ் மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. நா. பஞ்சலிங்கம், யாழ்ப்பாணம் பிரதேச கிராம, மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் சமாசத் தலைவர் திரு. நாகலிங்கம் தனேந்திரன் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
கண்காட்சியினை இந் நிகழ்வின் முதன்மை விருந்தினராகக் கலந்து சிறப்பித்த யாழ். மாவட்ட வடக்கு மாகாணசபை உறுப்பினர் என். கனகரட்ணம் விந்தன் நாடாவை வெட்டி ஆரம்பித்து வைத்தார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com