சற்று முன்
Home / செய்திகள் / யாழ்ப்பாணம்- சா்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டது..!

யாழ்ப்பாணம்- சா்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டது..!

யாழ்ப்பாணம்- சா்வதேச விமான நிலையத்தை ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா மற்றும், பிரதமா் ரணில் விக்கிரம சிங்க ஆகியோா் இணைந்து இன்று காலை 10.30 மணிக்கு உத்தியோக பூா்வமாக திறந்துவைத்ததுடன், இந்தியாவிலிருந்து முதலாவது பயணிகள் விமானம் 30 இந்திய விருந்தினா்களுடன் யாழ்ப் பாணம்- சா்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியிருக்கிறது. இதன்போது நீரை பாய்ச்சி அமோக வரவேற்பு வழங்கப்பட்டிருக்கின்றது.

இந்நிலையில் இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இடம்பிடித்தது. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம், மத்தள சர்வதேச விமான நிலையம் என்பன
முதலிரண்டு இடங்களில் உள்ளன.

திறப்பு விழா நிகழ்வில் அரசு தரப்பினர், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகள், அதிகாரிகள், முப்படையினர், பொது மக்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கு, முதலாவது விமான சேவையாக சென்னை விமான நிலையத்தில் இருந்து அலையன்ஸ் எயர் வந்து தரையிறங்கியது. எயர் இந்தியாவின் துணை நிறுவனமான, அலையன்ஸ் எயர் நிறுவனத்தின் ATR 72-600 விமானமே யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் முதலாவதாகத் தரையிறங்கியது.இந்த விமானம் தரையிறங்கிய போது, நீரைத் தாரை வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த விமானத்தில், எயர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் அஷ்வானி லொஹானி, அலையன்ஸ் எயர் தலைமை நிறைவேற்று அதிகாரி சுப்பையா, உள்ளிட்ட 30 பேர் வருகை தந்தனர்.

இரண்டாம் உலகப் போரின் போது யாழ்ப்பாணம் பலாலியில் விமானத் தளத்தை பிரிட்டன் விமானப் படை அமைத்தது.அதன்பின்னர் 1947ஆம் ஆண்டு டிசெம்பர் 10ஆம் திகதி தொடக்கம் கொழும்பு – இரத்மலானையிலிருந்து புறப்படும் விமானம் பலாலியில் தரையிறங்கி சென்னக்கு பயணத்தைத் தொடரும்.1976ஆம் ஆண்டு இலங்கை விமானப் படையின் முகாம் பலாலி விமானத் தளத்தில் அமைக்கப்பட்டது.

அதனால் 1982ஆம் ஆண்டு தொடக்கம் விமானப் படைக்கு பலாலி விமானத் தளம் மாற்றப்பட்டது.1990ஆம் ஆண்டு பலாலி உள்ளிட்ட வலி.வடக்கு பிரதேசம் உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து 1996ஆம் ஆண்டு லயன் எயர் நிறுவனத்தால் கொழும்புக்கான சிவில் விமான சேவை ஆரம்பிக்கப்பட்டது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com