யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை புளியங்கூடலில் சிறுவர் பெண்களுக்கான விழிப்பூட்டல் நிகழ்வு

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை புளியங்கூடல் ஜே-60 கிராம சேவகர் பிரிவுட்குட்பட்ட பிரதேசங்களில் சிறுவர் பெண்களுக்கான விழிப்பூட்டல் நிகழ்வு ஒன்று கடந்த திங்கட்கிழமை(20) பொதுமண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வினை தேவை நாடும் மகளீர் அமைப்பு ஏற்பாடு செய்ததுடன் சிறுவர் பெண்களுக்கு எதிரான வன்முறை அதற்கான தீர்வைகள் பாதுகாப்பு முறைகள் என்பன ஆராயப்பட்டன.

அத்துடன் ஊர்காவற்றுறை பெருங் குற்றத்தடுப்பு உப பொலிஸ் பரிசோதகர் எஸ்.விவேகானந்தன் இந்நிகழ்வில் பெண்கள் சிறுவர்களது உரிமைகள் பொலிஸாரினால் வழங்கப்படும் பாதுகாப்பு குறித்து தெளிவு படுத்தினார்.

மேற்குறித்த நிகழ்வில் அதிகளவான பெண்கள் கலந்து கொண்டதோடு தத்தமது பிரச்சினைகளை இங்கு முன்வைத்தனர்.

இப்பிரதேசத்தில் கடந்த காலங்களாக பல்வேறு சிறுவர் துஸ்பிரயோக செயற்பாடுகள் நடைபெற்று வந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com