யாழ்ப்பாணத்தில் நிவாரண உதவி கோரும் பொலிஸார்

யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய தென்பகுதியில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிப்பொருட்களை யாழ் மாவட்டத்தில் பொலிஸார் கோரிவருகின்றனர்.

தென்பகுதியில் வெள்ள இடரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அத்தியாவசியப் பொருட்களை அம் மக்களுக்கு தந்து உதவுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதற்கிணங்க பாதிக்கப்பட மக்களுக்கு உதவி செய்ய விரும்புவோர் எதிர்வரும் 1 ஆம் திகதி வரை யாழ் பொலிஸ் நிலையத்திலோ அல்லது யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் காரியாலயத்திலோ ஒப்படைக்க முடியும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com