யாழ்ப்பாணத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி வேட்பு மனுத்தாக்கல்

(யாழ் – 13.07.2015) பாராளுமன்றத் தேர்தலில் யாழ் மாவட்டத்திற்கான வேட்புமனுவினை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்அதன் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர்  தாக்கல் செய்துள்ளனர்.
தாயகம். தேசியம்.சுயநிர்ணயம் என்ற கோட்பாட்டினை தமது கொள்கையாக கொண்டு தாம் இத் தேர்தலில் போட்டியிடுவதாகவும்  தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஒரு நாடு இரு தேசம் என்பதனையே குறிப்பிட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


யாழ்ப்பணத்தில்போட்டியிடவுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வேட்பாளர்கள் விபரம் 
 கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (சட்டத்தரணியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் த.தே.ம.மு தலைவர் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்பொதுச்செயலாளர் )
செல்வராஜா கஜேந்திரன் (முன்னாள் பா.உ)
மணிவண்ணன் (சட்டத்தரணி)
ஆனந்தி சிவஞானசுந்தரம் (ஓய்வுபெற்ற அதிபர்- இராமநாதன் கல்லூரி)
சுதா – (குருநகர் பாடும் மீன் விளையாட்டுக்கழக உபதலைவர் )
அமிர்தலிங்கம் இராசகுமாரன் (விரிவுரையாளர்இ யாழ் பல்கலைக்கழக முன்னாள் ஆசிரியர் சங்க தலைவர்)
திருநாவுக்கரசு சிவகுமாரன் (சிவா) – யாழ் பல்கலைக்கழக பட்டதாரி – (தீவகம்)
பத்மினி சிதம்பரநாதன் (முன்னாள் பா.உ)
சின்னமணி கோகிலவாணி – (கிளிநொச்சி)
ஜெயரட்ணம் வீரசிங்கம் (வீரா) – (பல்கலைக்கழக ஊழியர் சங்கம்)
ஆகியோர்ஆவர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com