சற்று முன்
Home / செய்திகள் / யாழ்ப்பாணத்தில் சிங்கள முன்பள்ளி !!!

யாழ்ப்பாணத்தில் சிங்கள முன்பள்ளி !!!

யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக சிங்கள மொழிமூலமான முன்பள்ளி ஆரம்பிக்கப்படவுள்ளது.

சிங்கள மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் எனத் தம்மை வெளிப்படுத்துபவர்களால் இந்த முன்பள்ளி வரும் நவம்பர் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் அரியாலை – நெடுங்குளம் சந்தியில் இந்த முன்பள்ளி ஆரம்பிக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணம் சர்வோதயத்தின் அலுவலகத்தின் ஏற்பாட்டில் தேசிய ஒற்றுமையை வளர்க்கும் வகையில் மும்மொழிக் கல்விக்காக சிங்கள மொழிமூலமான முன்பள்ளி யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக ஆரம்பிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com