யாழ்ப்பாணத்தில் உலகத்தமிழ் பண்பாட்டு மாநாடு!

உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13 வது சர்வதேச மாநாடு இம்முறை யாழ்ப்பாணத்தினில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5 மற்றும் 6ம் திகதிகளில் இம்மாநாடு நடைபெறவுள்ளது.

ஒகஸ்ட் 5ம் திகதிய நிகழ்வு யாழ்.பல்கலைக்கழகத்திலும் 6ம் திகதி  நிகழ்வு யாழ்.நகரிலும் நடைபெறவுள்ளது. யாழ்.பல்லைக்கழகத்தினில் நடைபெறும் நிகழ்வினில் வடமாகான முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனும் அடுத்த நாளைய நிகழ்வினில் எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தனும் பங்கெடுக்கவுள்ளனர்.

இந்நிகழ்வினில் விருந்தினராக பங்கெடுக்க தென்னிந்தியாவிலிருந்தும் புலம்பெயர் தேசங்களிலுமிருந்தும் நூற்றுக்கும் அதிகமானவர்கள் பங்கெடுக்கவுள்ளதாக உலக பண்பாட்டு இயக்கத்தை சேர்ந்த ராஜசூரியர் தெரிவித்தார்.

யாழ்.ஊடக அமையத்தினில் நேற்று (12) புதன்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பினில் அதன் பிரமுகர் ராஜசூரியர் மற்றும் இலங்கை இணைப்பாளர் அருணாச்சலம் சத்தியானந்தன் உள்ளிட்டவர்கள் இணைந்து நிகழ்விற்கான அறிவிப்பினை விடுத்துள்ளனர்.

12வது உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் சர்வதேச மாநாடு கடந்த ஆண்டு தமிழ்நாடு பாண்டிச்சேரியினில் நடைபெற்றிருந்தது. இம்முறை வடக்கின் யாழ்ப்பாணத்திலும் நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com