சற்று முன்
Home / செய்திகள் / யாழ்ப்பாணத்தில் இன்று அதிகாலை திடீரென 11 இளைஞர்கள் கைது – ஆவாக் குழு என்கிறது பொலிஸ்

யாழ்ப்பாணத்தில் இன்று அதிகாலை திடீரென 11 இளைஞர்கள் கைது – ஆவாக் குழு என்கிறது பொலிஸ்

யாழ்ப்பாணத்தில் இன்று காலை திடீரென 11 இளைஞர்களைக் கைது செய்துள்ள பொலிசார் அவர்கள் வசமிருந்த வான் ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர்.

வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தலைமையிலான பொலிஸ் குழுவினரே இன்று அதிகாலை (18) 3 மணியளவில் மானிப்பாய் பிரதேசத்தில் வைத்து குறித்த இளைஞர்களைக் கைதுசெய்துள்ளனர்.

இதேவேளை குறித்த இளைஞர்கள் ஆவா குழுவுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே தாம் கைது செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள பொலிசார் 11 பேரில் இரண்டு பேர் ஆவா குழுவில் முக்கியஸ்தர்களான போல் விக்டர் மற்றும் அஞ்சித் எனவும், ஏனைய 9 இளைஞர்களும் ஆவா குழுவுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸ் தரப்பு குறிப்பிட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட 11 பேரும் சுமார் 22 வயது முதல் 24 வயதுடையவர்கள் என்றும், இவர்கள் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசம் ஒன்றில் வேன் ஒன்றில், 6 வாள்கள் மற்றும் 1 மோட்டார் சைக்கிளில் பயணித்த போதே, வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட 11 இளைஞர்களும் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு; விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

விசாரணைகளின் பின்னர் 11 பேரையும் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com