யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்ட ரயில் சாவகச்சேரியில் தீப்பற்றியது

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி இன்று நண்பகல் புறப்பட்ட குளிரூட்டப்பட்ட தொடருந்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
யாழ்.புகையிரத நிலையத்தில் இருந்து கொழும்பு நோக்கிப்புறப்பட்ட தொடருந்தின் இயந்திர பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

சாவகச்சேரி பகுதியில் தொடருந்து சென்று கொண்டிருந்த போதே தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அதனை அடுத்து தொடருந்து நிறுத்தப்பட்டு , மீள யாழ். புகையிரத நிலையத்திற்கு திரும்பியுள்ளது.

இயந்திர கோளாறு காரணமாகவே இவ் விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com