யாழ்ப்பாணத்திற்கு விரையும் சிறப்பு அதிரடி படையினர்!

பொலி­ஸார் மீதான தாக்­கு­தல் – வாள்­வெட்­டுச் சம்­ப­வங்­கள் யாழ்ப்­பா­ணத்­தில் திடீ­ரென அதி­க­ரித்­துள்ள நிலை­யில், அதி­ர­டிப் படை­யின் அதி சிறப்­புப் பிரி­வி­னர் யாழ்ப்­பா­ணத்­துக்கு இன்­றைய தினம் வருகை தர­வுள்­ள­தாக பொலிஸ் வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன.

இந்த மாதம் 21ஆம் திகதி மண் அகழ்வு நட­வ­டிக்­கை­க­ளில் ஈடு­பட்­டி­ருந்­தோர் கட­லோ­ரக் காவற்­ப­டை­யி­னர் மீது தாக்­கு­தல் நடத்­தி­யி­ருந்­த­னர். மறு­நாள் 22ஆம் திகதி நல்­லூ­ரில் துப்­பாக்­கிச் சூடு இடம்­பெற்­றி­ருந்­தது.

அதில் மேல் நீதி­மன்ற நீதி­பதி மா.இளஞ்­செ­ழி­ய­னின் மெய்ப்­பா­து­கா­வ­லர் உயி­ரி­ழந்­தி­ருந்­தார். கடந்த 26ஆம் திகதி நெல்­லி­ய­டிப் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பகு­தி­யில் வைத்து தமிழ் பொலிஸ் அதி­காரி மீது இனந்­தெ­ரி­யாத கும்­பல் தாக்­கு­தல் நடத்­தி­யி­ருந்­தது.

இவ்­வா­றா­ன­தொரு நிலை­யில், கொக்­கு­வில் பகு­தி­யில் வைத்து கோப்­பாய் பொலிஸ் நிலை­யத்­தைச் சேர்ந்த பொலி­ஸார் இரு­வர் மீது வாள்­வெட்­டுத் தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டுள்­ளது.

மானிப்­பா­யில் இளை­ஞர் மீதும் வாள்­வெட்டு இடம்­பெற்­றுள்­ளது. இந்­தத் தொடர் சம்­ப­வங்­கள் தொடர்­பில் விசா­ர­ணை­களை மேற்­கொண்டு, வாள்­வெட்­டுக் குழுக்­களை கைது செய்­வ­தற்­காக அதி­ர­டிப்­ப­டை­யின் அதி சிறப்பு படைப் பிரி­வைச் சேர்ந்­த­வர்­கள் கொழும்­பி­லி­ருந்து யாழ்ப்­பா­ணத்­துக்கு இன்று வருகை தர­வுள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com