யாழ்ப்பாணத்திற்கு புலம்பெயர் தமிழரால் கிடைத்த இசைக்கருவி

யாழ்ப்பாணத்தின் குறியீடாகவும் அதன் அடையாளமாகவும் கருதப்படும் சின்னமான யாழ் இசைக்கருவி இரண்டை புலம்பெயர் தமிழர் ஒருவர் வடிவமைத்து யாழ்ப்பாணத்திற்கு எடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று (30) இவ்விரு யாழ் இசைக்கருவிகளும் யாழ்ப்பாண பொது நூலகத்திற்கும் யாழ். பல்கலைக்கழகத்திற்கும் அவரால் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதன்போது யாழ் பொது நூலகத்தில் வைத்து பிரதம நூலகரின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் யாழ். மாநகர ஆணையாளர் பொ.வாகீசனிடம் இந்த யாழ் இசைக்கருவி அவரால் கையளிக்கப்பட்டது.

யாழ். மத்திய கல்லூரி பழைய மாணவரும் நோர்வே நாட்டில் தற்போது வசித்துவரும் புலம்பெயர் தமிழரான கந்தமூர்த்தி கலாரெஜி என்பவரே இவ் இரண்டு யாழ் இசைக்கருவிகளை வடிவமைத்துள்ளார். இவர் கொண்டு வந்த யாழ் இசைக்கருவிகளில் ஒன்றை யாழ் பொது நூலகம் மற்றும் யாழ். பல்கலைக்கழக நுண்கலைப்பீடம் ஆகியவற்றிற்கு வழங்கியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com