யாழில் 95 கிலோ கேரள கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் சுமார் 95 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து வந்த விசேட போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேற்கொண்ட நடவடிக்கையில் யாழ். தென்மராட்சி உசன் பிரதேசத்தில் மேற்படி 95 கிலோ கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேற்படி கேரள கஞ்சாவானது இந்தியாவிலிருந்து கடல்மார்க்கமாக கடத்தி வரப்பட்டு பருத்தித்துறையிலிருந்து கொழும்பிற்கு கொண்டு செல்ல முற்பட்ட வேளையில் நேற்று நள்ளிரவு மேற்படி கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் தப்பிச்சென்றுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds