யாழில் 8,000 வீடுகளுக்கு மின்சாரம் இல்லை. – மின்சக்தி பிரதி அமைச்சர்.

யாழ். மாவட்டத்தில் 8 ஆயிரம் பேர் மின்சாரமின்றி உள்ளனர். அவர்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு மின்சாரம் வழங்க வேண்டும். தவறினால் அதற்கு கிராமஅலுவலர் பொறுப்பாளிகள் என மின்சக்தி பிரதி அமைச்சர் அஜீத் பீ.பெரேரா தெரிவித்தார்.

இலங்கை மின்சார சபையின் வட பிராந்திய காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்ற அனைவருக்கும் மின்சாரம் நிகழ்ச்சித்திட்டதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே  இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கூறுகையில்,

இருள் அகன்று முழுநாடும் ஒளிபரப்பும் இத்திட்டத்தில் 1 இலச்சத்து 20 ஆயிரம் பேருக்கு மின்சாரம் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. யாழில் 8,000 வீடுகளுக்கு மின்சாரம் இல்லை. இதுவொரு பெரிய தொகை ஆகும்.

ஒரு வீட்டில் குடும்பம் உள்ளதென்றால் மின்சாரம் வழங்கவேண்டும் என்பது அரசின் கொள்கை. அது எவ்வகை வீடானாலும் மின்சாரம் வழங்க வேண்டும் இதனை நடைமுறைபடுத்த கிராமஅலுவலர்கள் தமது பகுதியில் மின்சாரம் இல்லாதவர்களை கண்டறிந்து அவர்களுக்கான விண்ணப்பங்களை நிரப்பி மின்சாரத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

அடுத்த 3 மாத காலத்தில் யாழில் கிடுகு வீடாக இருந்தாலும் மின்சாரம் கொடுக்க வேண்டும். கைத்தொழில் என்பது பொருளாதாரத்தின் முதுகெலும்பு. அதனை மக்கள் தொடர மின்சாரம் தடையாக இருக்கக்கூடாது. அதனை வடக்கு மக்களுக்கு சிறப்பாக பெற்றுக்கொடுப்பது தான் எமது அபிலாசை. மீள்குடியேறிய மக்கள் அனைவருக்கும் இலவசமாக மின்சாரம் வழங்கப்படும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com