சற்று முன்
Home / செய்திகள் / யாழில் 35 ஆயிரம் குடும்பங்களுக்கு வரட்சி நிவாரணம்

யாழில் 35 ஆயிரம் குடும்பங்களுக்கு வரட்சி நிவாரணம்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 2018ம் ஆண்டு நிலவிய வரட்சி நிவாரணத்திற்காக 35 ஆயிரத்து 7 குடும்பங்களிற்காக 3 கட்டங்களாக தேசிய அணர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் ஊடாக உதவிகள் வழங்கப்பட்டதாக மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

2018ம் ஆண்டில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் 15 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஏற்பட்ட வரட்சியின்போது பாதிக்கப்பட்ட மக்களின் விபரங்களிற்கேற்ப பிரதேச செயலக ரீதியில் நிவாரணம் கிடைத்தது. இதன் பிரகாரம் உரிய பிரதேச செயலாளர் பிரிவுகள் மூலம் விநியோகம் இடம்பெறுகின்றன. இவற்றின் அடிப்படையில் முதல் கட்டமாக 14 ஆயிரத்து 460 குடும்பங்களில் 7 ஆயிரத்து 300 குடும்பங்களிற்கு 4 ஆயிரம் ரூபா பொருட்களும் 7 ஆயிரத்து 160 குடும்பங்களிற்கு 5 ஆயிரம் ரூபா பொருட்களும் வழங்கப்பட்டன.

இதேபோன்று இரட்டாம் கட்டமாகவும் 14 ஆயிரத்து 460 குடும்பங்களிற்கும் இதே அளவில் இதே பெறுமதியான பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. தற்போது 3 ம் கட்டமாக 20 ஆயிரத்து 547 குடும்பங்களிற்கு வழங்கப்பட்ட பொருட்களில் 9 ஆயிரத்து 190 குடும்பங்களிற்கு 4 ஆயிரம் ரூபா பெறுமதியிலான பொருட்களும் 11 ஆயிரத்து 357 குடும்பங்களிற்கு 5 ஆயிரம் ரூபா பெறுமதியிலான பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com