சற்று முன்
Home / உள்ளூர் செய்திகள் / யாழில். 101 வயதுடைய முதியவர் உயிழந்தார் !

யாழில். 101 வயதுடைய முதியவர் உயிழந்தார் !

யாழில். 101 வயதுடைய முதியவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
சாவகச்சேரி தனக்களைப்பை பிறப்பிடமாக கொண்டவரும் கலாசாலை வீதி , திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா நமசிவாயம் என்பவரே உயிரிழந்தவராவர்.
ஓய்வு பெற்ற கிராம சேவையாளரான முதியவர் கடந்த 1917 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 18ஆம் திகதி பிறந்தார். இவர் கடந்த ஆண்டு தனது 100 ஆவது பிறந்த நாளை தனது பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் , பூட்டபிள்ளைகளுடன் கொண்டடி மகிழ்ந்தார்.
இவருக்கு 11 பிள்ளைகளும் , 33 பேரப்பிள்ளைகளும் , 12 பூட்டப்பிள்ளைகளும் உள்ளனர்.
அந்நிலையில் கடந்த ஓரிரு மாதங்களாக சுகவீனம் உற்று இருந்த நிலையில் நேற்றைய தினம் மதியம் உயிரிழந்தார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com