சற்று முன்
Home / செய்திகள் / யாழில் வைத்தியரைத் தாக்கிய றியோ கிறீம் ஹவுஸ் இழுத்து மூடப்பட்டது

யாழில் வைத்தியரைத் தாக்கிய றியோ கிறீம் ஹவுஸ் இழுத்து மூடப்பட்டது

கொரோனா வைரஸ் விவகாரத்தில் ஈடுபட்ட வைத்தியரை தாக்கிய விவகாரம் யாழ் றியோ கிறீம் ஹவுஸ் மூடப்பட்டது.
வெளிநாட்டில் இருந்து வருகை தந்தவர்கள் நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் றியோ கிறீம் ஹவுஸிற்குச் சென்றுள்ளனர்.

இதனைக் கேள்விப்பட்ட ஊர்காவற்துறை வைத்திய பொறுப்பதிகாரி பரா.நந்தகுமார் மற்றும் குழுவினர் விசாரணை மேற்கொண்டு வெளிநாட்டவர்கள் வருகை தந்தால் தமக்கு அறிவிக்க வேண்டும். அத்தோடு கொரோனா வைரஸ் தாக்கம் மற்றும் தொற்றும் முறை பற்றியும் எடுத்துரைத்தார். அதன் பின்னர் திலீபன் நினைவிடத்திற்கு அருகில் காத்திருந்த வேளையில் றியோ பணியாளர்கள் உட்பட சிலரால் வைத்திய குழு தாக்கப்பட்டனர்.

இதில் முதல் குற்றவாளியாக றியோ கிறீம் ஹவுஸ் உரிமையாளர் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டதையடுத்து றியோ கிறீம் ஹவுஸ் நேற்று மாலையிலிருந்து மூடப்பட்டுள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com