யாழில் வாள் வெட்டு ! குடும்பஸ்தர் படுகாயம்!

யாழ்ப்பாணம், கச்சேரியடியில் வாள்வெட்டுக் கும்பல் மேற்கொண்ட கொலைவெறித் தாக்குதலில் குடும்பத்தலைவர் ஒருவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

முகத்தை துணியால் மறைத்தவாறு 5 மோட்டார் சைக்கிள்களில் வந்த வாள்வெட்டுக் கும்பல் குடும்பத் தலைவரின் தலையில் கோடாரியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பித்தது என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாண, தபால் பெட்டிச் சந்தியில் நேற்றிரவு (10) 7 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. அரியாலையைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான சோ.ஜெசிந்தன் (வயது – 32) என்பவரே படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாண போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

“மணல் ஏற்றிகொண்டு சென்ற அவர் அதனைப் பறித்துவிட்டு தனது மகனுடன் வீடு நோக்கி உழவு இயந்திரத்தில் வந்து கொண்டிருந்தார். அவர் தபால் பெட்டிச் சந்திப் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் தேனீர் அருந்திவிட்டு உழவு இயந்திரத்தில் புறப்பட்டுள்ளார். இதன் போது அங்கு 5 மோட்டார் சைக்கிள்களில் முகத்தை மறைத்து துணியால் கட்டிக்கொண்டு வந்த கும்பல் குடும்பத்தலைவர் மீது கைக் கோடரியால் சரமாரியாக வெட்டடிவிட்டுத் தப்பித்துச் சென்றுள்ளது.

தலை மற்றும் கால் பகுதிகளில் வெட்டு காயங்களுக்குள்ளான அவர், அங்கிருந்தவர்களால் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்” என்று விசாரணையில் மேலும் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் இடம்பெற்ற இடத்தில் உள்ள கடை ஒன்றில் சிசிரிவி கமரா பொருத்தப்பட்டிருந்தது. அதன் கணொளிப் பதிவை வைத்து சம்பவத்துடன் தொடர்புடையவர்களை அடையாளம் காணமுடியும் என்று பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com