சற்று முன்
Home / செய்திகள் / யாழில் மூன்று மீனவர்களைக் காணவில்லை

யாழில் மூன்று மீனவர்களைக் காணவில்லை

யாழ் குறிகட்டுவான் கடலில் மீன்பிடிக்கச்சென்று காணாமல் போன மூன்று மீனவர்களையும் கடற்படையினரின் உதவியுடன் தேடுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக யாழ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ் நாவாந்துறை வடக்குப் பகுதியைச்சேர்ந்த தோனிஸ் மல்கன் (வயது 44) , செபமாலை அலெக்ஸ் மற்றும் ரூபன் ஆகியோரே இவ்வாறு காணமல் போயுள்ளனர். இதுதொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

குறிகட்டுவான் கடலுக்கு நேற்று முன்தினம் மதியம் மீன்பிடிக்க செல்வதாக உறவினரிடம் கூறிவிட்டு சென்ற படகு உரிமையாளர் மற்றும் அவருடன் வேலைபார்க்கும் இருவரும் நேற்று காலை வரை வீடு திரும்பவில்லை.

நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணியளவில் தோனிஸ் மல்கன் தனது மனைவிக்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டு நடுக்கடலில் திசை தெரியாது நிற்பதாகவும் இந்த தகவலை நயினாதீவு கடற்படையினருக்கு தெரிவிக்குமாறு குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் தோனிஸ் மல்கனின் தொலைபேசி செயலிழந்துள்ள நிலையில் அவரின் மனைவி நேற்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து கடற்படையினரின் உதவியுடன் தேடுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக யாழ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com