சற்று முன்
Home / செய்திகள் / யாழில் முதலாவது முஸ்லிம் குடியேற்றம்: அமைச்சரவை அனுமதி

யாழில் முதலாவது முஸ்லிம் குடியேற்றம்: அமைச்சரவை அனுமதி

யாழ்ப்பாணத்தில் 250 முஸ்லிம் குடும்பங்களிற்கான வீட்டுத் திட்டம் அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

யாழ்ப்பாணத்தின் அராலி, பொன்னாலை சந்திப்பகுதியில் உள்ள 7.5 ஏக்கர் காணியில் இந்த வீடுகள் அமையவுள்ளன. இரண்டு மாடிகளை கொண்ட இரட்டை வீடுகளாக ஒவ்வொன்றும் அமையும்.

ஒவ்வொரு வீடும் 600 சதுர அடிகளை கொண்டிருக்கும்.

இந்த வீட்டுத் திட்டம் பற்றி தமிழ் பக்கம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தது. இறுதியாக பிரதமர் யாழ்ப்பாணம் வந்திருந்தபோது, இந்த வீட்டுத் திட்டத்திற்கு பிள்ளையார் சுழி போட்டிருந்தார். அதற்கு முன்னர் பிரதமர் யாழ்ப்பாணம் வந்திருந்தபோது, வீட்டுத்திட்டத்திற்கான முதற்கட்ட ஆலோசனையை அமைச்சர் ரிசாத் பதியுதீன் மற்றும் யாழ் முதல்வர் ஆகியோர் முஸ்லிம் மக்களுடன் இணைந்து மேற்கொண்டனர். அப்போது, என்ன நடந்தாலும் வீட்டுத் திட்டத்தை அமைத்து தருவேன் என யாழ் முதல்வர் அடித்துக் கூறியிருந்தார்.

கடந்த முறை பிரதமர் யாழ் வந்தபோது நடந்த அபிவிருத்தி மீளாய்வு கூட்டத்தில், வீடு தேவையானவர்களின் உண்மையான பதிவை விட அதிக தொகையை ரிசாத் தரப்பு குறிப்பிடுவதை யாழ் அரசாங்க அதிபர் சுட்டிக்காட்டியிருந்தார்.

அந்த பகுதியிலுள்ள தமிழ் சட்டத்தரணியொருவர் இந்த காணியை விற்பனை செய்திருந்தார். குடியேற்றம் அமைப்பதற்காக இந்த காணியை முஸ்லிம் பிரமுகர் ஒருவர் கொள்வனவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

எழுச்சிப் பாடகர் வர்ண ராமேஸ்வரன் அவர்கள் சாவடைந்தார்

நெஞ்சை உருக்கும் மாவீரர் நாள் பாடலான ‘மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி’ ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com